×
 

நலம் தரும் கருப்பட்டியை தினமும் இப்படி செய்து சாப்பிடுவோமா?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு எண்ணற்ற நன்மை பயக்கும் மூலக் கூறுகள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.

நல்ல இனிப்பு சுவை கொண்டது என்பதால் நாம் அதனை சக்கரைக்கு பதிலாக தினமும் சேர்த்து கொண்டால் அதன் முழு பயனை அடையலாம். பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை நன்றாக காய்ச்சிய பின் கருப்பட்டி வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பதால் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் அதில் சுண்ணாம்பு கலப்பதால் நமக்கு சுண்ணாம்பு சத்தும் சேர்த்து கிடைக்கிறது. இதனால் பல், மற்றும் எலும்புகள் பலம் பெறும்.

உடல் அழகு கூடவும் பளபளப்பாக இருக்கவும் இதனை தினசரி உணவில் சேர்த்து வரலாம். கருப்பட்டியை மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்து உண்ண ஏற்றவையாக உள்ளதால் அதனை டீ, காபி, கசாயம், இனிப்பு பலகாரங்கள், கஞ்சி போன்ற அனைத்து உணவுகளிலும் சேர்க்கலாம்.

இதையும் படிங்க: வண்டி ஓட்டும்போது மொபைலை பயன்படுத்துபவர்களே உஷார்.. அபராதம் எவ்வளவு தெரியுமா?

கருஞ்சசீரகம், ஓமம் , வெந்தயம், மற்றும் கருப்பட்டியுடன் சேர்த்து  நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மேலும், கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கூட குறையும் என்று நடைமுறை உண்மையாக கூறப்படுகிறது.

வெறும் ஓமம், கருப்பட்டியுடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை சாப்பிட்டு வர வாயுத் தொல்லை நீங்கும். சீரகம், சுக்கு, கருப்பட்டி தண்ணீரில் கொதிக்கவைத்து பருகி வந்தால் பசியின்மைக்கு சரியான தீர்வைத்தரும் . குழந்தைகளுக்கு குப்பைமேனிக் கீரையை வதக்கி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வர இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும் என்று கூறப்படுகிறது.

 

கருப்பை ஆரோக்கியமாக இருக்க பருவம் அடைந்த பெண்கள் கருப்பட்டி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. கருப்பட்டி, கருப்பு உளுந்து இரண்டையும் சேர்த்து உளுந்தங்களியாக சாப்பிட்டு வரலாம். மேலும், கருவுற்ற தாய்மார்கள் சுகப்பிரசவம் அடைய கருப்பட்டியை உணவில் சேர்த்து கொள்ளலாம். குழந்தை பெற்ற தாய் மார்கள் சுக்கு, கருப்பட்டி மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரந்து குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினையை போக்கி ஆண்மையை அதிகரிக்க கருப்பட்டி பெரும் பங்காற்றுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட கருப்பட்டியை வெள்ளை சக்கரைக்கு பதிலாக நாம் பயன் படுத்தி வந்தால் எண்ணற்ற நோய்களிலிருந்து விடுபடுவதோடு, ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

இதையும் படிங்க: இந்த 5 கார்களை போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் வாங்கி இருக்காங்க.. டாப் 5 கார்கள் லிஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share