அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், இளைய சகோதரர் மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் நேருக்கு சொந்தமான சென்னையில் உள்ள டிவிஹெச் தொடர்புடைய நிறுவனத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
திருச்சி, தில்லைநகர், ஐந்தாவது குறுக்கு தெரு பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லம், 10வது தெரு உள்ள ராமஜெயம் இல்லத்திலும், திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நேருவின் மகள் தொடர்புடைய மூன்று வீடுகளிலும்அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று கோவை மாவட்டம் மசக்கி பாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் இளைய சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் மற்றும் தமிழக போலீசார் என பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்தது எப்படி? கே என் நேருவை சுற்றும் மர்மம்.. சுத்து போட்ட ED..!

குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணக்கில் பல ஆவணங்கள் காட்டப்படாத, ஆக வந்த தகவல் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பதிவெண் கொண்ட காரில் வந்த அமலகத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். இதில், 100 கோடி பணம், 90 சவரன் தங்கம், பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவற்றை சூட்கேஸ்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளி வருகின்றனர்.
இதையும் படிங்க: ED-க்கு எதிரான வழக்கு.. தமிழக அரசு மனுவில் உள்ள 30 முக்கிய குற்றச்சாட்டுகள் இதுதான்..!