தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பலரது வீடுகளில் கடந்த 6-ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிளவில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசை காப்பாற்ற குறைத்து மதிப்பிட்டு காட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், 1000 கோடி ரூபாய் ஊழல் என பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி வென்றால் பிரேமலதா துணை முதல்வர்.. அதிமுகவினரை ஜெர்க் ஆக்கிய தேமுதிக நிர்வாகி!

பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது என்றும் இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது., அது வரவேற்கத்தக்கது என கூறினார்.

இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உட்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டதாக சுட்டிக்காட்டினார். அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி என்றும் கூறினார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சத்தியமே வெல்லவில்லை... ஆத்திரப்பட்ட பிரேமலதா... அடுத்த நொடியோ போன் போட்ட எடப்பாடியார்..!