டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் 2000 கோடி ரூபாய் மதுபானக் கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இது இட்டுக்கட்டப்பட்ட போலியான தகவல் என ஆம் ஆத்மி கட்சி நிராகரித்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை சமீபத்தில் கசிய விடப்பட்டு இருந்தது. அதில், ஆம் ஆத்மி அரசால் வகுக்கப்பட்ட கலால் கொள்கையால் மாநில அரசின் கஜானாவிற்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை ஓரம் கட்டுவதற்காக இந்த விகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் அரசு கருவூலத்துக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு மதுக் கடைகளை ஆம் ஆத்மி திறந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி சட்டசபை தேர்தல் சுவாரஸ்யம்: 'ஜானவாச குதிரை' புகைப்படத்தை போட்டு, "மாப்பிள்ளை யார்?" என, ஆம் ஆத்மி கிண்டல்; பாஜக பதிலடி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் மதுபான ஊழலில் ஆம் ஆத்மி மும்முரமாக இருந்துள்ளது"என்ன குற்றம் சாட்டியிருந்தார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவும் தனது சமூக ஊடகப் பதிவில் கெஜ்ரிவாலை 'ஊழல் மன்னன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை
ஆனால் வெளியான இந்த அறிக்கை போலியானது என ஆம் ஆத்மி கூறியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், “பாஜக மீண்டும் அதே பழைய குற்றச்சாட்டை சுமத்துகிறது. சிஏஜி அறிக்கை என்று சில பக்கங்களை காட்டுகிறது. இது போலியானது. பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
"சிஏஜி அறிக்கையை முதல்வர் இதுவரை பார்க்காத சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டி இன்று பாஜக மீண்டும் பழைய குற்றச்சாட்டுகளை கூறுகிறது. இது பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை.
"அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழலில் ஒரு பைசா அளவுக்கு கூட ஆதாரம் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவில் இது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பாஜக வாயைத் திறந்தாலே அது பொய் தான்" என்றும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சிஏஜி அறிக்கை சொல்வது என்ன?
இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ள கசிந்த சிஏஜி அறிக்கையில் "விலை நிர்ணயத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிமம் வழங்குவதில் மற்றும் புதுப்பித்தலில் விதிமீறல், மீறியவர்களுக்கு அபராதம் விதிக்காதது, துணைநிலை ஆளுநர், அமைச்சரவை அல்லது சட்டசபையில் ஒப்புதல் பெறாதது போன்ற கடுமையான மீறல்களை டெல்லி அரசு செய்தி இருப்பதாக" கூறப்பட்டு இருந்தது.
"சில்லறை மதுபான உரிமங்களை ஆம் ஆத்மி அரசு மறு டெண்டர் செய்யாததால் கருவூலத்திற்கு 890 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக"வும், "மண்டல உரிமதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய விஷக்குகளால் அரசுக்கு கூடுதலாக 940 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருந்ததாகவும்" அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி எதற்க்கு? பாஜகவில் சேருங்கள். சீமானுக்கு காங்கிரஸ் சுளீர்!