இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வந்தது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 47ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காசாவில் இருந்து புலம்பெயர்ந்துவிட்டனர். உணவு, குடிநீர்,மருத்துவ வசதி உள்ளிட் அடிப்படை வசதிகள் காசாவில் இல்லாததால் மக்கள் பிழைப்பு தேடி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இருதரப்பிலும் பேச்சு நடத்தின. இதன் முடிவில் பிணையக் கைதிகளை விடுவித்தால் போரை முடிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் முடிவுக்கு வந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் பிணைக் கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தம், கையெழுத்தானாது
கூட காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 46 ஆயிரம் பேரை பலி கொண்ட 'காசா போர்' முடிவுக்கு வந்தது: ஹமாஸ் சமரச ஒப்பந்தத்தை ஏற்றது, இஸ்ரேல்!

இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த 4 பெண் வீரர்களை காசா நகரில் உள்ள சதுக்கத்தில் செஞ்சிலுவை அமைப்பிடம் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்று ஒப்படைத்தனர் என ஏஎப்பி செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 4 பேரும் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் பெயர் கரினா அவெவ், டேனியலா கில்போ, நமா லெவி, லிரி அல்பாக்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இஸ்ரேலியப் பெண்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்தமைக்காக, சிறையில் இருந்த 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தது.
6வாரங்கள் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதியில் ஒவ்வொரு பெண் வீரர் விடுவிக்கப்படும்போதும், 50 பாலஸ்தினியர்கள் சிறையி்ல் இருந்து அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்திருந்தது. இதுவரை 200 பாலஸ்தினியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுவித்திருந்தது.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு