திருமணமான தம்பதியினர் வாழ்க்கையில் தாம்பத்யம் ஒரு முக்கியமான அம்சம். ஆனால், இன்றைய காலத்தில் பல்வேறு காரணங்களால் தம்பதியினர் இடையேயான அன்னியோன்யம் இருப்பதில்லை. இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்மெட் என்கிற நிறுவனம் உறக்கம் சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தம்பதிகள் தனித்து உறங்குவது பற்றிய காரணங்கள் தெரியவந்துள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

அந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவில் சுமார் 78 சதவீத இந்திய தம்பதியர்கள் நல்ல, ஆழ்ந்த உறக்கத்துக்காக தங்களது இணையரை தவிர்த்து, தனித்து உறங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் சீனா 68 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தென் கொரியா 65 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த தம்பதியர் 50 சதவீதம் பேர் தங்களது தனித்து உறங்குகின்றனர்.
குறட்டை, சத்தமாக மூச்சு விடுதல், வேலை நேரம் மாறுபடுவது, படுக்கையில் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை இதற்கான காரணங்களாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். வயது அதிகம் உடைய தம்பதியர் அதிகம் பேர் தனித்து தூங்குவதாக கூறியுள்ளனர். இதனால் தங்களது ஆரோக்கியமும் ஆழ்ந்த உறக்கமும் மேம்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் தம்பதியர்கள் ஒன்றாக இணைந்து தூங்குவதும் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் போன்றவை குறைவதாக ஆய்வில் பங்கேற்ற தம்பதியர்கள் கூறியுள்ளனர். மகிழ்ச்சி, அமைதி போன்றவை ஏற்படுவதாக ஒன்றாக தூங்கும் தம்பதியர்கள் கூறியுள்ளனர். மேலும், மாறி வரும் உலக சூழல் காரணமாக பெரும்பாலானோர் தூக்கமின்றி தவிப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம், பதற்றம், நிதி சார்ந்த நெருக்கடி, மனநலன் மற்றும் உறவு சிக்கல் போன்றவையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: தானோசாக மாறிய டிரம்ப்...கலக்கத்தில் இந்தியா!!
இதையும் படிங்க: இந்தியாவை கண்காணிக்கும் வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவுகள்.. துருக்கி ட்ரோன்கள் வருகை..!