கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை தமிழகத்தில் 28 நாட்களில் 42 கொலைகள் நடந்து அதிர வைக்கின்றன. ''தமிழகத்தில் தினந்தோறும் நடக்கும் கொலை, கொள்ளைகளே உங்கள் ஆட்சியின் சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! உ ங்களை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் தமிழ்நாடு சுடுகாடாகும்.. எனக் கொதிக்கொன்றன எதிர்கட்சிகள். ''இன்று உயிரோடு இருக்கிறோம், நாளை அது இருக்கிறோமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. நாள்தோறும் தமிழகத்தில் கொலைகள் நடந்து வருகிறது'' என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அச்சம் தெரிவிக்கிறார்.

ஆனால், ''தமிழகத்தில், ஆதாயக் கொலைகள், கொலைகள், குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த, 2024ல் பதிவான வழக்குகள், அவற்றின் தற்போதைய விசாரணை நிலை, அதன் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது, நகை, பணம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடிக்கும் விதமாக நடந்த ஆதாயக் கொலைகள் தொடர்பாக, 2023ல், 83 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில், 75 வழக்குகள் பதிவாகி, 10 சதவீதம் குறைந்துள்ளது'' என சப்பைக்கட்டு கட்டுகிறார் தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்.. புள்ளிவிவரம் காட்டும் பாமக தலைவர் அன்புமணி..!

கடந்த 28 நாட்களில் மட்டும் நடைபெற்ற கொலைப்பட்டியல் இதோ…
பிப்ரவரி 25 மதுபோதை விவகாரத்தில் கூடங்குளத்துக்கு அருகே பார்த்திபன் கொலை
பிப்ரவரி 27 முன்விரோதத்தால் மணமேல்குடியில் சத்தியநாராயணன் கொலை
பிப்ரவரி 28 கடன் தொகை வசூலிக்கச் சென்ற கும்பகோணம் சிவா கொலை
மார்ச் 03 தூத்துக்குடிக்கு அருகே 70 வயது சீதாலட்சுமி, அவரின் மகள் ராமஜெயந்தி கொலை
மார்ச் 04 மதுரையில் ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர் இந்திராணி கொலை
மார்ச் 05 மதுபோதைத் தகராறில் நெல்லையில் மகேந்திரன் கொலை
மார்ச் 05 முன்விரோதத்தால் பரமக்குடிக்கு அருகே ரௌடி உத்திரகுமார் கொலை
மார்ச் 06 விழுப்புரத்துக்கு அருகே லோகநாதன் கொலை
மார்ச் 06 ஊட்டிக்கு அருகே மதுபோதை ஆசாமியால் முதியவர் கொலை
மார்ச் 07 மதுபோதைத் தகராறில் நாகர்கோவிலுக்கு அருகே வேலு எரித்துக் கொலை
மார்ச் 08 சோளிங்கருக்கு அருகே முன்விரோதத்தால் ரௌடி சீனிவாசன் கொலை

மார்ச் 11 தஞ்சாவூருக்கு அருகே ரௌடி குறுந்தையன் கொலை
மார்ச் 11 காஞ்சிபுரத்துக்கு அருகே ரௌடி வசூல்ராஜா கொலை
மார்ச் 11 மதுரையில் கமலேஷ் என்பவர் கொலை
மார்ச் 11 மதுபோதைத் தகராறில் திண்டுக்கல்லுக்கு அருகே சமையல் மாஸ்டர் பாலாஜி கொலை
மார்ச் 11 மதுபோதை விவகாரத்தில் ஈரோட்டுக்கு அருகே மதியழகன் கொலை
மார்ச் 12 தொண்டிக்கு அருகே முத்துராஜா கொலை
மார்ச் 12 மதுரையில் டிரம்ஸ் இசைக்கலைஞர் அழகர்சாமி கொலை
மார்ச் 13 மதுபோதைத் தகராறில் கோவைக்கு அருகே சுரேஷ் கொலை
மார்ச் 14 போதைத் தகராறில் கன்னியாகுமரிக்கு அருகே ஹரிஹரசுதன் எரித்துக் கொலை
மார்ச் 15 திருமங்கலத்துக்கு அருகே வி.ஏ.ஓ முத்துபாண்டி கொலை
மார்ச் 15 மதுபோதைத் தகராறில் நெல்லைக்கு அருகே இசக்கிராஜன் கொலை
மார்ச் 15 திருச்சிக்கு அருகே சுரேஷ் என்பவர் கொலை
மார்ச் 15 கருக்கு அருகே ரௌடி சந்தோஷ்குமார் கொலை
மார்ச் 15 ஆரணிக்கு அருகே ரௌடி விக்னேஷ் கொலை

மார்ச் 16 சென்னையில் ரௌடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை
மார்ச் 16 முன்விரோதத்தால் சிவகாசிக்கு அருகே சுரேஷ் கொலை
மார்ச் 16 அயனாவரத்தைச் சேர்ந்த தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி குமார் கடத்திக் கொலை
மார்ச் 17 மதுபோதைத் தகராறில் ஈரோட்டுக்கு அருகே கணேசன் கொலை
மார்ச் 18 நெல்லைக்கு அருகே ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலி கொலை
மார்ச் 18 விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரித்துக் கொலை
மார்ச் 18 செல்லூரில் பா.ஜ.க பிரமுகர் கருப்பசாமி சந்தேக மரணம்
மார்ச் 19 ஈரோட்டுக்கு அருகே ரௌடி ஜான் வெட்டிக்கொலை
மார்ச் 21 காரைக்குடியில் ரௌடி மனோஜ் வெட்டிக்கொலை
மார்ச் 21 திருத்தணிக்கு அருகே இளைஞர் லோகேஷ் கொலை
மார்ச் 22 மதுரையில் ரௌடி கிளாமர் காளி கொலை

மார்ச் 23 கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்துக் கொலை
மார்ச் 23 மதுபோதைத் தகராறில் கோவைக்கு அருகே காளிமுத்து கொலை
மார்ச் 23 மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை
மார்ச் 25 மதுபோதையில் கோவையில்பாட்டிலால் குத்தி ஆறுமுகம் கொலை
மார்ச் 25 மதுபாட்டிலால் குத்தி டீசல் ஊற்றி கொடைக்கானலில் தொழிலதிபர் எரித்து கொலை
இந்தக் கொலைப் பட்டியலை படிக்கும்போதே தமிழகத்தில் ரத்தவெறியாட்டம் அதிகரித்து வருவது நடுக்கமூட்டுகிறது.

''கொலைக்கான திட்டங்கள் வகுக்கப்படும் போது அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவது தான் காவல்துறையின் பணி. ஆனால், அதில் கோட்டை விடும் காவல்துறை, கொலை நடந்த பிறகு குற்றவாளிகளை பிடித்து, அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு, குற்றவாளிகளை சுட்டுப் பிடித்து விட்டதாக சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இது காவல்துறைக்கு அழகு அல்ல.
கொலை நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம், கடந்த ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றெல்லாம் கூறுவதன் மூலம் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் தவறியதை தமிழக அரசு நியாயப்படுத்த முடியாது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மோசமாக சீரழிந்து வருவதையே தினசரி கொலைகள் காட்டுகின்றன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் -ஒழுங்கைக் காக்கவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அனைவரும் கொந்தளிக்கிறார்கள். திராவிட மாடல் அரசுக்கு மரண ஓலம் கேட்கவில்லையோ..?
இதையும் படிங்க: வன்முறையின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகுது.. எச்சரித்த ஓபிஎஸ்..!