''வள்ளலார் ஐயா வைகுண்டர் போல என்ன புரட்சி செய்தார் பெரியார்? பெரியார் குறித்துப் பேச பொது விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். பெரியார் என்ன சாதித்தார். பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது''
என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சை கிளப்பி உள்ளார்
இதுகுறித்து பிரபல யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான், ''ஆயிரம் வழக்கு வந்தாலும் திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விட மாட்டோம். எங்கே வீழ்ந்தேனோ அங்கே தானே எழனும். இழிவுபடுத்தி, சிதைத்து அழித்தீர்களோ அதை இப்போது உங்களுக்கு எதிராக நான் செய்து வருகிறேன். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா? என இப்படியே பேசிப் பேசி எங்களை வீழ்த்தினீர்கள்.

அடுத்தவன் மொழி எப்படி எங்களுக்கு அறிவாகும் என்கிற கேள்விக்கு பதில் இருக்கிறதா? அந்த மொழியை ஒருத்தர் சனியன் என்கிறார். பாரதி இனிது என்கிறார். இன்னொரு தாத்தா தமிழ் எங்கள் உயிர் என்கிறார். இப்போது இதில் நாங்கள் எதை ஏற்க வேண்டும் என்பது கேள்வி. இனிது என்றவன் ஒன்றும் இல்லை. உயிர் என்றவனும் ஒன்றுமில்லை. இந்த சனியன் என்றவர் தந்தை.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி எதற்க்கு? பாஜகவில் சேருங்கள். சீமானுக்கு காங்கிரஸ் சுளீர்!
எப்படி மானங்கெட்டு, ஈனம் கெட்டு, தன்மானம், சுயமரியாதை என்று சொல்லிச் சொல்லி தமிழனை மானம் இழக்க வைத்து, கேவலமான சின்னமாக வைத்திருக்கிறார்கள். இதை இப்போது நான் சொல்லவில்லை என்றால் எனக்குப் பின்னால் வரும் தலைமுறை எப்படி உணர்ந்து கொள்ளும்..? யார் எடுத்துச் சொல்வார்கள்? நீங்கள் 50 ஆண்டுகளாக செய்ய முடியாத முன்னேற்றத்தை எங்கள் முன்னோர்களின் பேரன் பிரபாகரனின் தம்பியிடம் ஒரு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள்.

50 ஆண்டுகளாக செய்ய முடியாத முன்னேற்றத்தை 5 ஆண்டுகளில் நான் செய்து காட்டுகிறேனா? இல்லையா என்று பாருங்கள். ரெண்டு கூட்டம் இருக்கு. தமிழ் உயிர் என்கிற கூட்டத்திற்கும், தமிழ் சனியன் என்கிற கூட்டத்திற்கும் சண்டை. கைத்தடியா? இல்லை துப்பாக்கியா? என்று பார்த்துவிடிவோம்ம். தமிழ் தேசியம் ஒன்றுமில்லையாம்... ஆனால், பெரியார் இல்லாமல் திராவிடம் இல்லை, பெரியார் இல்லாமல் அரசியல் இல்லை... பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது... ஒண்ணுமே செய்ய முடியாது என்கிறார்கள். வேற யாரும் இல்ல... திராவிடனை நான் வெல்கிறேனா இல்லையா என்று பாருங்கள்..'' என்று சவால் விட்டுள்ளார் சீமான்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவு, சென்னையில் திமுக புகார்...கைதாகிறார் சீமான்?