தமிழக வெற்றிக் கழகத்திற்குள் நுழைந்துள்ள முக்கிய புள்ளிகளால் தன்னுடைய நிலை பரிதாபமாக போய்விடுமோ என்ற பயத்தில் இருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். ஆரம்பத்திலிருந்தே ஆதவ் அர்ஜுனாவை கட்சிக்குள் வரக்கூடாது என போராடி வந்த புஸ்ஸி ஆனந்தின் அனைத்து யுகங்களும் புஸ்ஸாகி அவர் கட்சிக்குள் வந்ததோடு மட்டுமின்றி முக்கிய பொறுப்பிலும் அமரவைக்கப்பட்டுள்ளார். மற்றொருபுறம் அதிமுகவில் இருந்து வெளியேறிய சிடிஆர் நிர்மல் குமாருக்கும் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது

இது தவெகவிற்கு பலமாக இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு தான் பெரிய அடியாக இருக்கும் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே ஒற்றை ஆளாக களத்தில் சுழன்று வருகிறார் புஸ்ஸி ஆனந்த். மாநாடு, பரந்தூர் விசிட் என அனைத்தையும் பக்காவாக பிளான் செய்து எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடித்தார். சில சமயங்களில் விஜயை விட புஸ்ஸி ஆனந்த் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முகமாக இருக்கிறாரா? என விமர்சிக்கப்படும் அளவுக்கெல்லாம் சென்றது.

விஜயை ஓரங்கட்டிவிட்டு புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பியது. ஆனால் தற்போது கட்சியில் இணைந்துள்ள இரண்டு பேருக்கும் பொதுச்செயலாளருக்கு அடுத்து இருக்கக்கூடிய முக்கியமான பொறுப்புகளே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆனந்தின் பதவிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய பதவியே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் புஸ்ஸி ஆனந்த் ஓரம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேச்சுகள் எழுகின்றன.
இதையும் படிங்க: 2026ல் தவெகவுடன்- விசிக கூட்டணி... ஆதவ் அர்ஜூனா இணைப்பு… திருமா- விஜய் முன்பே பேசி வைத்த நாடகமா..?

ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா கட்சியிலே இணைத்துக் கொள்ளப்பட்டால் தன்னுடைய செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று புஸ்ஸி ஆனந்த் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகின. விசிகவிலேயே திருமாவளவனுக்கு அடுத்து நம்பர் டூ ஆக முயற்சித்த ஆதவ் அர்ஜுனாவை, அந்த கட்சியின் நிர்வாகிகள் கண்டறிந்து அவரது செயல்பாடுகள் குறித்து திருமாவளவனிடம் புலம்பினார். அதே நிலை தற்போது தவெகவிற்கும் தனக்கு வந்துவிடுமோ? என்ற பயம் புஸ்ஸி ஆனந்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

அதனால் ஆரம்பத்திலிருந்தே அவரை கட்சிக்குள் வரவிடாமல் எவ்வளவோ முயற்சி செய்தும் கடைசியில் அது கை கொடுக்கவில்லை. 26 தேர்தலை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ள விஜய், இவர்களை கட்சிக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என கறார் காட்டியுள்ளார். ஆனந்த் களத்தில் ஆக்டிவாக இருந்தாலும் திமுகவை டார்கெட் செய்து ஆதவ் நடத்தும் அரசியல் தவெகவிற்கு பிளஸ் ஆக இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு விஜய் வந்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்குள் ஆதவ் அர்ஜுனா நுழைந்துள்ள நிலையில் அடுத்தடுத்ததாக அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது, நம்பர் டூ ஆக புஸ்ஸி ஆனந்தே தொடரப்போகிறாரா அல்லது அந்த இடத்தை ஆதவ் அர்ஜுனா பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் ஆதவ்… உடனே விசிக வைத்த ஒரே கோரிக்கை… இளம் சிறுத்தைகளை ஈர்க்கும் யானை..!