இப்பொழுது எல்லாம் ஃபையராக படம் எடுக்க சொன்னா 'ஃபயர்'ன்னே படம் எடுத்து பேமஸ் ஆகுறாங்க. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ்,ரச்சிதா மகாலட்சுமி நடித்த 'ஃபயர்' படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் என்று சொல்லி வசூலை ஏற்ற கிளாமர் காட்சிகளை அள்ளி தெறித்திருப்பார் டிரைக்டர். ஆனால் அவர் படத்தை இயக்கி வெளியிட்டு விட்டார் அதில் சிக்கியது என்னமோ நடிகை ரட்ச்சிதா தான். இப்படம் தற்பொழுது வெளியாகி பலரது எதிர்ப்புகளை கடந்து திரையரங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், படத்தை பார்த்த பலரும் ரச்சிதா மகாலட்சுமியை வசைபாடி வந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா, இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியுமா?. இந்த படத்தில் உள்ள நடிகைகள் அனைவருமே கிளாமராக நடித்திருந்தாலும் உச்சக்கட்டமான கிளாமரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். இவ்வளவு ஆபாசம் எதற்கு..? இதைவிட, ரச்சிதா பேசுவதை கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. ஏனெனில் ரச்சிதா பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று கூறுகிறார். பிறகு சமூக சேவைக்காகவா இப்படி ஆபாசமாக நடித்தார். சரி, சமூக சேவையாகவே இருந்தாலும் இந்த காட்சிகளுக்கு பணம் வாங்காமல் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா?.. ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும். என்று திட்டி தீர்த்தார்.
இதையும் படிங்க: மரியாதையே கொடுக்க மாட்டிங்கிறாங்க.. இப்படி ஒரு கான்சட் தேவையே இல்ல.. வெளியேறிய நடிகை..!

இது ஒரு பக்கம் இருக்க 'ஃபயர்' படம் வெளியான அன்று, திரையரங்கில் மக்களுடன் படத்தை பார்த்து வெளியே வந்த நடிகர் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். பாராட்டு மழையில் நனைந்த பாலாஜி, உணர்ச்சி வசப்பட்டு தியேட்டர் வாசலில் அழுதபடி பேட்டியளித்தார், அப்போது இளம் நடிகர்கள் நடிக்க வரும்பொழுது சிலரின் கடுமையான விமர்சனத்தால், அவர்களின் நம்பிக்கையையும் வாழ்க்கையும் சீரழிக்கிறார்கள். இதில் அரசியல் மற்றும் பெரிய ஜாம்பவான்கள் பின்புலம் கொண்ட இளம் நடிகர்கள் மீது எந்தவித விமர்சனங்களையும் யாரும் முன்வைப்பதில்லை எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன், இந்த படத்தில் நடிக்க தைரியம் வேண்டும். எல்லோரும் நடித்து விட முடியாது. நடித்த எல்லா நடிகைகளின் சௌகரியம் மிக முக்கியம். அதனை பொறுத்தே இந்த படத்தில் நடித்தேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், பல எதிர்ப்புகள் மத்தியில் வெளியான இப்படம் '10' கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக மாறி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், தியேட்டருக்கு சென்ற இயக்குநர் ஜே.சதீஷ்குமார், பாலாஜிக்கு தங்க செயின் அணிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பாலாஜி, 'தான் பிரைவேட் ஜெட் கேட்டதாகவும், தவறுதலாக இயக்குநர் தனக்கு தங்க செயின் போட்டு விட்டதாகவும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். பின்னர, பிக் பாஸில் தனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கும், படம் பார்த்த அனைவருக்கும் நன்றி எனக் கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வு படம் விண்ணைத்தாண்டி வெற்றி என குஷி கொண்டாத்தில் இருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!