நடிகை ரன்யா ராவ் மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்தபோது, அவரிடம் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி நடிகை ரன்யா கடத்தியது விசாரணையில் அம்பலமான நிலையில், அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டது குறித்தும், தங்கத்தை கடத்தியது குறித்தும், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருந்தார்.

துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்றும் இதற்கு முன்பு துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததோ வாங்கியதோ இல்லை எனவும் யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையையே நடிகை ரன்யா ராவ் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோர் தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: தங்கம் கடத்த நகைக்கடையே நடத்தி வந்த நடிகை... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

இதன் பிறகு நடிகை ரன்யா, அவரது நண்பர் தருண் ராஜு, கடத்தல் தங்கத்தை விற்க உதவிய நகை வியாபாரி ஷகில் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதோடு, ஹவாலா வழியில் பணத்தை மாற்றும் வேலையிலும் ரன்யா ராவ் ஈடுபட்டதாகவும், அவருக்கு ஷகில் ஜெயின் உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தையும், பிப்ரவரியில் 11.8 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கத்தையும், 11.25 கோடி ஹவாலா பணத்தையும் துபாயில் இருந்து ரன்யா ராவ் கொண்டு வந்ததாகவும் கூறி உள்ளனர். ஒவ்வொரு ஹவாலா பரிமாற்றத்துக்கும் தலா, 55,000 ரூபாயை ரன்யா கமிஷனாக பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டில் சிக்கிய 2 கோடியே 67 லட்ச ரூபாயும் ஹவாலா பணமாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: தங்கம் கடத்திய நடிகை.. சர்ச்சை கருத்தால் சிக்கிய பாஜக எம்எல்ஏ..!