சீமான் குறித்து கருத்து தெரிவித்திருந்த அண்ணாமலை, “தமிழகத்தில் திராவிட கட்சிகளை எதிர்க்கிறீங்கன்னா பலமுனை தாக்குதல் வரும். குறிப்பாக பெரியாரை கையில் எடுத்தீங்கன்னா, பலமுனையிலிருந்து தாக்குவாங்க, பர்சனல் லைஃப் உள்ள போவாங்க, காவல்துறையினுடைய அத்துமீறலை பார்ப்போம். ஒரு மனிதனை தொடர்ந்து நீங்க அடிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, அது எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் ஒரு இடத்துல வந்து மனது சோர்வடையும்” என பேசியிருந்தார்.

இதையடுத்து சீமானுக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலையை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னைக்கு திரு அண்ணாமலை அவர்கள் வந்து திராவிட கட்சிகளும் பெரியார்ஸ்டுகளும் என்னோட கேஸை வச்சு சீமானை ஒரேயடியாய் அடிக்கிற மாதிரியும், அந்த அடியில் சீமான் எதுவும் சோர்வடைஞ்சிடக்கூடாது. நல்லா போராடனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஏன் இவ்வளவு அக்கறை?... கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி...!
திரு அண்ணாமலை அவர்களே உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. உங்க பிரெண்ட் சீமான் ஒன்னும் ஈழத்துக்காக போராடியோ, இல்ல கச்சத்தீவை வந்து மீட்ட போயோ ஒன்னும் கேஸ் வாங்கல. ஈழத்துல ஈழத் தமிழர்கள் எல்லாம் செத்துட்டு இருக்கும் போது, என் கூட குடும்பம் நடத்திட்டு. என்னோட காசெல்லாம் புடுங்கி பாலியல் ரீதியா என்னை துன்பப்படுத்தி தெருவுல விட்டுட்டு, யாராவது கேட்டா வந்து எனக்கு அவங்களை யாருனே தெரியாது. அப்படின்னு தான் இத்தனை வருஷம் சொல்லிக்கிட்டு ஏமாத்திட்டு இருந்தாரு, திமுகவோட காலகட்டத்துல தான் காவல்துறை வந்து கேட்க வேண்டிய விதத்துல கேட்டதுக்கு அப்புறம், ஆமா நான் குடும்பம் நடத்துனேன் அப்படின்னு ஒத்துக்கிட்டாரே. அதை நீங்க பாக்கலையா. அதைவிட உலகமே காரி துப்புற மாதிரி அவா ஒரு பாலியல் தொழிலாளி அப்படின்னு சொன்னாரே, அத நீங்க பாக்கலையா.

திரிஷாவோட விஷயத்துல வந்து மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிட்டாருன்னு சொல்லி மொத்த பாரதிய ஜனதாவும் இறங்கி போராடுனாங்க. குஷ்பு கூட வந்து பெரிய அளவுல குரல் கொடுத்தாங்களே. என்னை வந்து பாலியல் தொழிலாளி அப்படின்னு சொன்னபோது ஏன் உங்க கட்சியில இருந்து யாருமே குரல் கொடுக்கல?. இதுல எந்த அரசியலும் இல்ல அண்ணாமலை அவர்களே இன்ஃபேக்ட் சீமானை இந்த கேஸ்ல இருந்து ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாத்துறதா எனக்கு தோணுது அதனாலதான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும் பாவம் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி வந்து இன்னும் ஏமாறக்கூடாது அப்படின்னு எனக்காக நேர்மையா குரல் கொடுத்துட்டு இருக்காங்க.
உங்களோட பிரண்டா இருக்கலாம் ஆனா சீமான் மாதிரி ஒரு பொறுக்கிக்கு போய், நீங்க குரல் கொடுத்தா உங்களையும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா அண்ணாமலை?. ஏதோ நீங்க தெரியாம பேசி இருக்கலாம். அதனால அவர் என்னெல்லாம் பண்ணார் அப்படின்னு சொல்லி உங்ககிட்ட தெரியப்படுத்தலாம் அப்படின்னு நினைச்சேன் என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர திட்டினா கூட அவரோட கெத்து வேற லெவல்..? சீமானை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த அண்ணாமலை..!