திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என குணசேகரன் பேசியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் குணசேகரனை எதிர்த்து திமுகவை சேர்ந்த செல்வராஜ் போட்டியிட்டார். இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூர் தெற்கு பகுதியில் தோல்வி அடைந்த நிலையில், அதனை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இதையும் படிங்க: களேபரமான அம்பேத்கர் பிறந்தநாள்.. திமுக - பாஜகவினர் இடையே மோதல்..!

இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் உடைந்து அழுததால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். நிர்பந்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதாக அதிமுக கொறடா கண்ணப்பன் தெரிவித்தார். ஆனால் அதிமுக இஸ்லாமியர்களுடன் எப்போதும் துணை நிற்கும் என நாதழுதழுத்து கண்ணப்பன் பேசினார். மாமன்ற உறுப்பினராக கண்ணப்பன் போட்டியிட்ட பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி… கடந்த முறை கவுன்சிலர் தேர்தலில் கடினமான நேரத்தில் கடந்து வெற்றி அடைந்துள்ளார். தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல்..! பாஜக - தமிழ் தேசிய முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு..!