அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11:15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கான பின்னணி என்னவென பார்க்கலாம்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகாத நிலையில், அதிமுக வட்டாரங்களில் இருந்து இரண்டு தகவல்கள் கிடைத்துள்ளன.

இரட்டை இலை தொடர்பான வழக்கு தற்போது டெல்லியில் இருக்கக்கூடிய நிலையில், அந்த வழக்கு தொடர்பாக அக்கட்சியின் பொதுசெயலாளர் என்ற அடிப்படையில் நேரில் சென்று விளக்கம் அளிக்க இருப்பதாகவும், அந்த வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல சமீப நாட்களாக அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்களில பேச்சு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி… HC-யிலும் உள்குத்து… வெடிக்கும் சமூக ஆர்வலர்..!
எங்களுக்கு திமுக மட்டும்தான் எதிரி, அதனை வீழ்த்துவதற்கு நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீப நாட்களாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவினுடைய முக்கிய தலைவர்களை அவர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு வேலைகளுக்காகவுமே செல்கிறாரா? அல்லது இரண்டில் ஒன்றுக்காக செல்கிறாரா? என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே அவர் தவறாமல் வர வேண்டியது கட்டாயம்.

நேற்றுவரை ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக வந்து கொண்டுதான் இருந்தார். இதனால் இது ஏற்கனவே திட்டமிட்ட பயணமா அல்லது திடீர் பயணமா என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் கூட விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!