தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில், "அவர்களே (பாஜக), பல பதிவுகளில் ரூ என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவர்களுக்கு, இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!" என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,"மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், "FAILURE மாடல் அரசின் விளம்பர மாடல்” மு.க.ஸ்டாலின்.
உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை. தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான்!
இதையும் படிங்க: இந்திய அளவில் பட்ஜெட்டும் ஹிட்டு.. தமிழும் ஹிட்டு.. ஹேப்பி மோடில் முதல்வர் ஸ்டாலின்!!

தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல்,"ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்! பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே "UTTER FLOP" தான்!
72 ஆண்டுகால தமிழ்நாட்டு
ஆட்சிகளின் மொத்த கடனையும்
4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் ரெக்கார்டு பிரேக் மற்றும் பிளாக் பஸ்டர் சாதனை செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான்! இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..!" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்