தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவி கொடுக்கும் புதுமையான விஷயத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுடன் திமுக முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டி வரும் எடப்பாடி பழனிசாமி, யார் அந்த சார்? என்ற போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: என்னங்க எடப்பாடியை ஸ்டாலின் இப்படி வசமா மாட்டிவிட்டாரு...! சட்டப்பேரவையில் நடந்த தரமான சம்பவம்!
2025ம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே யார் அந்த சார் போராட்டத்தை சட்டப்பேரவைக்குள்ளும் அதிமுகவினர் கொண்டு சென்றனர். மேலும் தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் வாகனங்களிலும் யார் அந்த சார்? என்ற வாசகம் ஒட்டப்பட்டு, தங்களது போராட்டத்தை பட்டி, தொட்டி எல்லாம் பரப்பினார்.

தற்போது தமிழக பெண்கள் தங்களைத் தாங்களே தான் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, சென்னை ராயப்பேட்டையில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவியை வழங்கினார். “இனி ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்த பயனும் இல்லை... அன்புச்சகோதரிகளே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு ” என்ற வாசகம் அடங்கிய பாக்ஸில் வைத்து பெப்பர் ஸ்பிரே மற்றும் எஸ்ஓஎஸ் கருவி வழங்கப்பட்டது.
விடியா திமுக ஆட்சியில் அன்புச் சகோதரிகளே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் உங்களுக்கு அளித்த pepper spray,sos alarm ஆகியவை அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை எப்போதும் உடன் வைத்து கொள்ளுங்கள்.
இனியும் இந்த… pic.twitter.com/FwnIw2WvMZ
— Raj Satyen - Say No To Drugs & Dmk (@satyenaiadmk) January 11, 2025
இதையும் படிங்க: #BREAKING ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் - தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!