சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமியை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவினர் வலியுறுத்தினர்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை பேச அனுமதிக்கவில்லை எனக்கு ஒரு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எங்களைப் பார்த்து பயம் ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியதற்கு, இங்கு உள்ள உறுப்பினர்கள் யாரும் பயந்தவர்கள் இல்லை என சபாநாயகர் கூறினார். மேலும் நீங்கள் கேட்கும் போதெல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் வார விழா... இளம் படைப்பாளர் விருது... பேரவையில் சூப்பர் டூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்...

இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்..! அரசு செவி சாய்க்குமா? வேதனையில் காத்திருக்கும் விவசாயிகள்..!