அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15-ஆம் தேதி காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஷாக் மேல ஷாக்..! அதிமுகவில் இருந்து விலகிய முக்கியப்புள்ளி..!

சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி… அமித்ஷா கொடுத்த உத்தரவும்… உத்தரவாதமும்… இ.பி.எஸுக்கு கிடுக்குப்பிடி..!