மதுரை அலங்காநல்லூர் கோவில் பாப்பாகுடி அருகே உள்ள சமுதாயக்கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளரை சந்தித்தவர்,கூட்டணி குறித்த கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை மதசார்பற்ற கட்சிகளுடனே கூட்டணி எங்கள் கொள்கையுடன் யார் வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி.எங்கள் எதிரி திமுக.நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எடப்பாடியை யார் முதல்வராக ஏற்று கொள்கிறாரோ அவர்களுடன் கூட்டணி.

விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? என்ற கேள்விக்கு தேர்தல் வரும் வரை என்னா வேண்டுமானலும் பேசுவார்கள் எனத் தெரிவித்தார். அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராக முன்னிருந்த வேண்டும் என கோரிக்கை எழுவதாகவும், ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியைத் தவிர யாருக்குமே முதல்வர் பதவி கிடையாது என விடாப்பிடியாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?

கடைசியாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர், விஜய் துணை முதலமைச்சர் என பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்லூர் ராஜூ அளித்த பதில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தம்பி விஜய், ரொம்பவே குழப்பிக் கொள்கிறார்… சீமான் சொன்ன அந்த ரகசியம்..!