2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்கினார். ஒவ்வொரு துறை சார்ந்து நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 2.40 நிமிடங்கள் பட்ஜெட் உரை சார்ந்த புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட் இன்று அறிக்கவிட உள்ளது. நேற்று போல் இன்று காலை 9.30 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்மை துறை சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஒன்றரை மணி நேரம் உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!
இதற்கு முன்னதாக 2021ம் ஆண்டு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொது பட்ஜெட்டில் இல்லாமல் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சியில் தற்போது 5வது முறையாக வேளாண் துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்லது. இந்த பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் வருமா? என்ற எதிபார்ப்பு உள்ளது.

நேற்று நடந்த பொது பட்ஜெட் தாக்கலில் கல்வித்துறைக்கும், பெண்கள் சார்ந்தும் பெரும்பாலான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை, மாணவிகள் மற்றும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் என மக்களின் பாராட்டுகளை பெறக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இது மட்டுமில்லால் தொழில்துறை சார்ந்து ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட் மீதான கவனத்தை பெற்றது. இதுபோன்ற கவனம் ஈர்க்கும் பட்ஜெட்டாக வேளாண் பட்ஜெட் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்று வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து வரும் 17ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. பின்னர் 24ம் தேதி துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும்.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்..!