2026இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களவை தொகுதி வரையறையால், தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.க்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும்.

இதுதொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் 5இல் நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. "அரசியலை மறந்து கவுரவம் பார்க்காமல் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: சம்மர் ஆட்டம் ஆரம்பம்... பி அலர்ட் மக்களே!!

இக்கூட்டத்தில் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்கின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்.
தவெக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மநீம சார்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்கிறது.
இதையும் படிங்க: தமிழை அழிப்பதே பாஜகவின் நோக்கம்... தோலுரித்த முதல்வர்...!