தேர்தல் தொடர்பான ஆவணங்கள், வீடியோக்கள், புகைப்படங்களை வாக்காளர்கள் பார்ப்பதற்கு தடைவிதித்து தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். தேர்தல் நடத்தை விதிகள் 1961- விதி 93ன் கீழ் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், வீடியோக்கள், கண்காணிப்பு கேமிரா காட்சிகள் 17சி படிவங்கள் உள்ளிட்டவற்றை மக்கள், வாக்காளர்கள் பார்ப்பதற்கு முன்பு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 2024, டிசம்பர் 20ம் தேதி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, தேர்தல் தொடர்பான ஆவணங்களை பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், 17சி படிவங்கள் ஆகியவற்றை பார்வையிட அனுமதிக்குமாறு வழக்கறிஞர் மெகமூத் பிரச்சா வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை ஏற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், மனுதாரர் பார்வையிடமும், அவருக்கு வழங்கவம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வந்த சில நாட்களில் மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளில் திடீரென சட்டத்திருத்தம் செய்து அறிவித்தது.

மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் கண்ணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞ்கள் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கறிஞர் சிங்கி வாதிடுகையில் “ வாக்கு மையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்கத் தடைவிதிப்பது, வேட்பாளர்களின் வீடியோ காட்சிகளை பார்க்கத் தடைவிதிப்பது 17சி படிவங்களை பார்க்க அனுமதிமறுப்பது புத்திசாலித்தனமான திருத்தங்கள்.
இதையும் படிங்க: தந்தையை மாற்றியவர், டெல்லி முதல்வர் அதிஷா" : 'பிரியங்கா கன்னம் கவர்ச்சி பேச்சை' தொடர்ந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்;

இதற்கு முன் தேர்தல் நடத்தைவிதிகள் 1961ல் இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்து. ஆனால், சட்டத்திருத்தத்துக்கு பின் இதைப் பார்க்க அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “ 17சி படிவத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை வழங்குவது சிறிய சிக்கல்தான் இது ஒவ்வொரு தொகுதிவாரியாகவழங்க வேண்டும் என்பது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும” எனத் தெரிவித்தார்
இதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில் “ படிவம் 17சி வெளியிட்டால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எவ்வாறு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது தெரிந்துவிடும். இந்த படிவத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கையொப்பமும் இருக்கும், எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் கையொப்பமிட்டிருப்பார்கள். தேர்தல் நடைமுறையை பாதுகாப்பாக கொண்டு செல்லவே திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள், தேர்தல் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது அதைத் தடுக்கவே திருத்தங்கள் என்று கூறுவது ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 17ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு உத்தரவிட்டு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!