பாகிஸ்தான் காதலரைத் திருமணம் செய்து கொள்ள முயன்று தோல்வியடைந்ததால், அமெரிக்காவை சேர்ந்த பெண் பாகிஸ்தானை விட்டு வெளியேற மறுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார். அமெரிக்க பெண் தனது கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு கராச்சியில் உள்ள பாகிஸ்தான் காதலனுக்காக நாடு விட்டு நாடு வந்து நட்டாற்றில் தவிக்கிறார்.
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு அமெரிக்கப் பெண் தன் காதலனால் நிராகரிக்கப்பட்டதால் கதறி அழுவதைக் கண்டதும், அந்தப் பெண்ணால், விமானம் கூட புறப்படாமல் காத்திருக்க வேண்டியிருந்தது. கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் பெண் விமானத்தில் ஏற மறுத்துவிட்டார். காரணம் அவரது பாகிஸ்தான் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கதறித்துடிக்கிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளைஞர் நிடல் மேமனை அமெரிக்காவை சேர்த பெண் ஓ'நிஜா ஆண்ட்ரூ ராபின்ஸ் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு காதலித்துள்ளார். காதல் வளர வளர, கணவனை விட்டு, பிள்ளைகளை விட்டுவிட்டு காதலரை திருமணம் செய்யும் திட்டத்துடன் அந்தப் பெண் அமெரிக்காவில் இருந்து 11 அக்டோபர் 2024 அன்று கராச்சிக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: காதலனை விஷம் வைத்துக் கொன்ற கல்லூரி மாணவி: தூக்குத் தண்டனை பெற்றது எப்படி? 'டிஜிட்டல் ஆதாரங்கள்' பற்றி பரபரப்பு தகவல்கள்
சமூக ஊடகங்களில் சந்தோஷமாக தொடங்கிய அவர்களது காதல் கராய்ச்சியில் சங்கடமாக்கி விட்டது. நிடால் மேமனின் குடும்பத்தினர் தங்கள் மகனை ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கா திஒருமணம் செய்து வைப்பது? என திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். தன் வீட்டினரின் பேச்சை தட்டமுடியாமல் அந்தச் சிறுவனும் தனது காதலியை விட்டு விலகினான். இதனை எதிர்பார்க்காத அமெரிக்க காதலி தன்னைத் தானே நொந்த கொண்டாள். இதுகுறித்தந்த அமெரிக்க காதலி கூறும்போது, '' எனது பாகிஸ்தான் காதலனை சமூக வலைதளங்களில் பார்த்தேன்.

அப்போது அவர் என்னை காதலிப்பதாக கூறினார். ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தபோதும் நான் அவரது காதலை ஏற்றுக் கொண்டேன். அப்போது நிடால் மேமன் என்னிடம் பாகிஸ்தானுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். அதை நம்பி நானும் பாகிஸ்தானுக்கு வந்தேன். எனது கணவர், இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு கராச்சிக்கு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்கிற கனவில் வந்தேன்.
அமெரிக்காவில் இருக்கும்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி விட்டு, பாகிஸ்தான் வந்தவுடன் நிடால் மேமன் தான் அளித்த திருமண உறுதியை நிறைவேற்றவில்லை. என் காதலர் திருமண உறுதியை நிறைவேற்றுவதற்கு சம்மதித்த போதும் அவர்களது பெற்றோர்கள் இந்த திருமண உறவை மறுத்துவிட்டனர். அதனால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது எனறு அந்த சிறுவன் மறுத்து விட்டான்'' எனக் கூறியுள்ளார்.
கராச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''அந்தப்பெண்ணிற்கு (ராபின்ஸ்) பாகிஸ்தான் குடியேற்ற அனுமதி இல்லை. அந்த பெண் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்படுவதால் அமெரிக்காவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஏற மறுத்துவிட்டார். பின்னர் விமானத்தில் ஏறவில்லை. இதனால் விமானம் புறப்படுவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டது. பாகிஸ்தானிய அதிகாரிகளும் அந்த பெண்ணின் உதவிக்காக கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.கராச்சியில் பல மாதங்கள் கழித்த பிறகு, அவர் அமெரிக்கா திரும்புவதற்கான டிக்கெட் காலாவதியானது.விசிட் விசா காலாவதியானதைத் தொடர்ந்து, கராச்சியை விட்டு வெளியேற முயன்ற பெண் விமான நிலைய போலீஸாரிடம் ஏஎஸ்எஃப் ஒப்படைக்கப்பட்டார்.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அவருக்கு திரும்பும் பயணச்சீட்டு மற்றும் நிதி உதவியை வழங்கியது. சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்காக விமான நிலைய அவசர கிளினிக்கிலும் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென அமெரிக்க காதலி மட்டுமல்ல. பாகிஸ்தான் அதிகாரிகளும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.அமெரிக்கா காதலியான ஓ'நிஜா ஆண்ட்ரூ ராபின்ஸின் வயது -33.
இதையும் படிங்க: முஸ்லிம் ஆண்கள் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் எத்தனை எப்ஐஆர் பதிவு: மத்திய அரசிடம் அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்