கல்வி, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் வலிமையில் சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்ட பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர், தனது வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் இருந்தார் என கூறியுள்ளார்.

சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவதன் மூலம், இந்தியாவின் மகத்தான ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அவர் வழங்கிஎவர் அம்பேத்கர் என கூறினார். நீதியான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான பாபா சாஹேப்பின் சிந்தனைகள் இன்றும் கூட நம் அனைவருக்கும் ஊக்கமளித்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவோடு கைக்கோர்த்ததில் பெருமை..! இது முன்னேற்றத்திற்கான கூட்டணி.. மார்தட்டிக் கொள்ளும் இபிஎஸ்..!

அரசியலமைப்பின் சிறந்த சிற்பியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் சுயமரியாதையின் அடையாளமாகவும் விளங்கிய பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவருக்கு தனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துவதாக அமித்ஷா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?