திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.காவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் இன்று உறுப்பினர் அட்டை வழங்குவதன் மூலமாக தொடங்கி வைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி
விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றார் .

திமுக அரசின் அவலங்களை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.தற்போது மனமகிழ் மன்றங்கள் மதுபானக் கூடங்களாக மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.
இதையும் படிங்க: 1000 ரூபாய் யாருக்கு வேணும்..பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு தான் வேணும்..போராட்டக்களத்தில் கர்ஜித்த சௌமியா அன்புமணி ..!