இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் முதல்வரை பற்றி அருவருப்பான, தரம் தாழ்ந்து பேசியுள்ள அநாகரீக செயலை கண்டிப்பாக கூறியுள்ளார். அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் என்ற பொறுப்பேற்றது முதலே ஆத்திரமூட்டும், வெறுப்பு அரசியலை விதைத்து, அமைதியை சீர்குலைத்து தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'திஸ் இஸ் ராங் ஸ்பீச் ப்ரோ...' விஜய் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

தமிழகத்தின் தொன்மை மரபுகளையும், நாகரிக உறவுப் பண்புகளையும் நிராகரித்து, நாக்பூர் குருமார்களின் கடைக்கண் பார்வைக்காக அண்ணாமலை பேசி வருவதாக சாடியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும், ஊடகங்களில் தனது கட்சியினர் சூழ்ந்திருக்கும் போது வாய்ப்பேச்சு பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து பேசட்டும் என்றும், அங்கு அவரது கேள்விகள் அனைத்திற்கும் விரிவான விளக்கம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!