ஒருமையில் பேச்சு... அத்துமீறிய கருத்துக்கள்... நேரடி மோதலுக்கு சவால் என அண்ணாமலையும், உதயநிதியும் மாற்றி மாறி சவால் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், '' உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். இந்த சவாலை ஏற்றுக் கொண்டால் பஞ்சாயத்தை முடித்துக் கொள்ளலாம்'' தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தரமில்லாத அரசியல்வாதி ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அது உதயநிதிதான். தாத்தா பெயர், அப்பா பெயரை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அடிப்படை ஆதாரத்தோடு கேள்வி கேட்டோம். அரசு பள்ளியில் மட்டும் கட்டாயப்படுத்தி இரு மொழியில் தான் படிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். தரம் இல்லாமல் பேசினீர்கள் என்றால் தரம் இல்லாமல் தான் உங்களுக்கு பதில் வரும். பிரதமருக்கோ, நிதித்துறை அமைச்சருக்கோ மரியாதை கொடுக்காமல் பேசினால் உங்களை உங்கள் பாணியில் பேச எங்களுக்கும் தெரியும்.நேற்று நாங்கள் ஆரம்பித்து இருப்பது வெறும் டிரைலர்தான்.
இதையும் படிங்க: சூடு பிடித்துள்ள தேர்தல் தந்திரங்கள்..! வழக்கம் போல மக்களுக்கு அல்வா கொடுக்கும் கட்சிகள்.. தெரிந்தே ரசிக்கும் வாக்காளர்கள்
இன்றைக்கு நான் சேலத்தில் ஒரு கல்யாணத்திற்கு தேதி கொடுத்திருக்கிறேன். நாளை காசி தமிழ் சங்கத்திற்கு செல்கிறேன். அங்கிருந்து கும்பமேளா செல்கிறேன்.கோயம்புத்தூருக்கு அமித்ஷா ஜி வருகிறார். நான் சென்னைக்கு எப்போது போகிறேனோ? அடுத்த வாரம் போகலாம் என்று இருக்கிறேன். அப்போது அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும்? நாளையும், தேதியையும், இடத்தையும் குறித்து கொடுங்கள். அண்ணாசாலை என்றால் பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. நீ இடத்தை முடிவு பண்ணு. நான் அந்த தேதியில் வருகிறேன். இடத்தை குறிப்பிடாமல் அண்ணா சாலைக்கு இங்கே வாங்க... அங்கே வாங்க... என்று சொல்லக்கூடாது.

நான் தனி ஆளாக வருகிறேன். பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் யாரும் என்னுடன் வர மாட்டார்கள். நான் தனியாக, ஒற்றையளாக வருகிறேன். நீ மொத்த படையையும், திமுக படை, மொத்த போலீஸ் படையை வைத்து என்னை தடுத்து நிறுத்திப் பார். நேற்று நான் சொன்னதிலிருந்து எப்போதும் நான் பின்வாங்க போவதில்லை. நான் நேற்றே சொன்னதுதான். கெட் அவுட் மோடி என்ற வார்த்தையை தமிழ்நாட்டினுடைய துணை முதலமைச்சர் மேடையில் பயன்படுத்துகிறார். அவர் வாயிலிருந்து அப்படி வரக்கூடாது.
இன்று சமூக ஊடக வலைத்தளங்களில் பார்க்கிறேன், ஒரு பக்கம் கெட் அவுட் மோடி என்று வருகிறது. இன்னொரு பக்கம் ஃபால்டாயில் பாபு என்று ஒரு குரூப். இரண்டு தரப்பினருக்கும், சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஐடிவிங் அனைவரும் சேர்ந்து முக்கி முக்கி இன்று இரவு வரை எவ்வளவு ட்வீட் போடுவீங்களோ போடுங்கள். நாளைக்கு காலையில் 6:00 மணிக்கு என்னுடைய ட்விட்டரில் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று நான் ட்வீட் செய்கிறேன். எவ்வளவு ட்ரீட் போகிறது என்று பார்ப்போம்.

நான் சவால் விடுகிறேன் உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். நேத்து நைட் ஆரம்பித்தாய். நாளைக்கு காலை 6 மணி வரை நான் உனக்கு நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம் உள்ளிட்ட எல்லோரையும் பயன்படுத்தி கெட் அவுட் மோடி என்று எவ்வளவு ட்ரீட் போட முடியுமோ போட்டுக் கொள். நாளைக்கு காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிடுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து 'ஸ்டாலினே வெளியே போ'. ஆட்சி சரியில்லை, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்களே நீங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று என்னுடைய முகநூலில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் ட்வீட் போட்டதை மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு...'' என சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தரமில்லாத ஒரே அரசியல்வாதி உதயநிதிதான்... உக்கிரமான அண்ணாமலை ..!