×
 

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அழுத்தம்... இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் வங்கதேசம்... ஒப்பந்தம் அறியாத மக்கா இந்த ‘மாஸ்டர் மைண்ட்’..?

குற்றம் அரசியல் தொடர்புடையதாக இருந்தால், ஒப்படைப்பு மறுக்கப்படலாம். என்றும் ஒப்பந்தம் வழங்குகிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்கள் வசம் இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மாணவர் இயக்கத்துக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பி வந்து தஞ்சம் புகுந்தார் ஹசீனா. அவரை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச உயர் அதிகாரிகள் வாய்மொழியாக கேட்டுக்கொண்டதை இந்திய வெளிவிவகார அமைச்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தபோதும் இந்த விவகாரம் குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வங்கதேச இடைக்கால அரசின் முக்கிய ஆலோசகர் முகமது யூனுஸ் தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி செய்ததாக ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேச இடைக்கால அரசின் வெளிவிவகார ஆலோசகர் தௌஹீத் ஹொசைன், இந்திய அரசிடம் வாய்மொழியாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பக் கோரி இந்தியாவுக்கு வாய்மொழியாக குறிப்பு அனுப்பியுள்ளோம் என்று தௌஹீத் ஹுசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு வால் நீட்டி சீனாவுக்கு தலை காட்டும் இலங்கை... அனுர திசாநாயக்க-வின் இரட்டை ஆட்டம்..!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக முன்னாள் தூதர் மகேஷ் சச்தேவ் கூறுகையில், ‘‘ வங்கதேசத்தின் இடைக்கால அரசு ஒப்படைப்பு கோரிக்கைக்கு எதிராக ஹசீனா நீதிமன்றத்தை அணுகலாம். இந்த வழக்கு இந்தியாவிற்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் தொடர்பானது. அரசியல், குற்றவியல் அம்சங்களை உள்ளடக்கியது.

ஐரோப்பாவில் இருந்து பயங்கரவாதிகளை ஒப்படைப்பதற்கான இந்தியாவின் கோரிக்கைகளை நிராகரித்தது ஒரு எடுத்துக்காட்டு.  ஹசீனா தனது நாட்டின் அரசின் மீதுள்ள அவநம்பிக்கை, நியாயமற்ற நடத்தையை எடுத்துக் கூறி கோர முடியும்.’’ என்று தெரிவித்துள்ளார்

.

இந்த நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தல் கோரிக்கை வெறும் வாய்மொழி குறிப்பு மட்டுமே. இது அரசு தகவல் பரிமாற்றத்தின் மிகக் குறைந்த மட்டமாக கருதப்படுகிறது. ஹசீனா ஏற்கனவே இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை இன்னும் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவை பாதிக்கும்.

இந்தியா- வங்கதேசம் இடையேயான நாடு கடத்தல் ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகள் அரசியல் விவகாரங்களில் நாடு கடத்தப்படுவதைப் பற்றி எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆனால் கிரிமினல் வழக்குகளில் அரசியல் கருத்துக்கள் பொருந்தாது.

இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் ஆரம்பத்தில் 2013 ல் கையெழுத்தானது. 2016 ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொதுவான எல்லைகளில் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. இருந்தபோதும் குற்றம் அரசியல் தொடர்புடையதாக இருந்தால், ஒப்படைப்பு மறுக்கப்படலாம். என்றும் ஒப்பந்தம் வழங்குகிறது.

ஹசீனா கண்டிப்பாக நீதிமன்றத்தில் அதை எதிர்த்துப் போராடுவார். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா தனது சட்டப்பூர்வ கடமைகளை புவிசார் அரசியல் கருத்தில் சமநிலைப்படுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 5 அன்று, மாணவர்கள் தலைமையிலான இயக்கம் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை அதிகாரத்தில் இருந்து அகற்றியது. பல வாரங்கள் எதிர்ப்புகள், மோதல்களுக்குப் பிறகு 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 76 வயதான ஹசீனா, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

டிசம்பர் 9 அன்று, ஷேக் ஹசீனா, பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த முஹம்மது யூனுஸ், மாணவர் போராட்டங்களின் "மாஸ்டர் மைண்ட்" என்று குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், இந்த போராட்டம் தனது அரசை கவிழ்க்க நெருக்கமாக வடிவமைக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். யுனைடெட் கிங்டம் அவாமி லீக்கின் மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய ஹசீனா, எதிர்ப்பாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட போதிலும், நாடு முழுவதும் அமைதியின்மை தொடர்ந்தது. இது நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று குற்றசாட்டி இருந்தார்.

இதையும் படிங்க: ‘2000 டன் செம்மரம் விற்று முதல்வரையே மாத்தணும்...’ நீச்சல் குளத்தில் சூ சூ போன அல்லு அர்ஜூன்... புஷ்பாவுக்கு மீண்டும் சிக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share