×
 

பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!

சந்தேகமே வேண்டாம். நீங்கள் சந்தேகப்பட்ட படி நடந்து கொண்டது முன்பு ஐபேக் பணியாளர்களும், தற்போது பெரும்பாலான பென் பணியாளர்களும்தான்.

இரண்டாம் ஆண்டை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பென் நிறுவனம் திமுகவினரிடையே புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. மீடியாக்களை கட்டுப்படுத்தும் சபரீசனின் பென் நிறுவனம் உதயநிதிக்கு எதிராக செயற்படுவதாக உடன் பிறப்புகளே உள்ளூர குமுறுகிறார்கள்.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த ஒருவர் பென் நிறுவனம் பற்றி கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். ‘‘பல மாநிலங்களில் வெல்லப் போகும் குதிரைகளின் மீது பயணம் செய்து இவரால்தான் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்கி பல கோடிகள் சம்பாதித்து பல கட்சிகளின் உள் விவகாரங்களை அறிந்து கொண்டு பீகாரில் தனிக்கட்சி ஆரம்பித்து செட்டில் ஆகிவிட்டார் பிரசாந்த் கிஷோர்.

அவர் திமுக நிர்வாகிகளின் மனநிலை,ஒவ்வொரு ஜாதிகளுக்கும் உள்ள வாக்கு சதவிகிதம், அவர்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள், கட்சியில் அதிருப்தி மனநிலையில் இருப்பவர்கள், பண பலமிக்கவர்கள். சட்டவிரோதமாக பணம் சேர்ந்தவர்கள்... இப்படி எல்லா தரவுகளையும் தெரிந்து அதை பலருக்கும் தாரை வார்த்து விட்டு சென்று விட்டார். அப்படி பி.கேவுடன் கூட வந்து நமது அனைத்து தரவுகளையும் தெரிந்து கொண்டு வெளியே வந்து நமக்கே பூச்சாண்டி காட்டுகிறார் லாட்டரி மார்ட்டின் மருமகன்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..!

நடந்தது தவறுதான் என்பது இப்போது தெரிந்திருந்திருக்கும். அதே தவறை பென் டீம் என்ற பெயரில் மீண்டும் செய்கிறோமா? ஐபேக்கில் வேலை பார்த்தவர்களையும், புதிதாக சம்பளத்துக்கு சிலரையும் போட்டு உருவாக்கிய பென் டீம் நம்பகத்தகுந்தது தானா?

எவன் எவனோ நமது நிர்வாகிகளுக்கு பென் டீம் என்ற பெயரில் அழைக்கிறான். நிர்வாகிகளிடம் எல்லா தரவுகளையும் சேகரித்து செல்கிறான். அவன் பென் டீம் தானா அல்லது எதிர்கட்சிகளிடம் இருந்து வந்தவன்களா? என்ற கிளாரிட்டி இல்லை.

முன்பு அறிவாலயத்தில் புகார் செய்தால் புகாருக்கு உள்ளானவருக்கே புகார் அனுப்பி வைக்கப்பட்ட வரலாறு உண்டு. அதே போல பென் நிர்வாகிகளை நம்பி தரும் தகவல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே வருவதாக தகவல்.

ஏன் வாடகைக்கு, சம்பளத்துக்கு ஆட்கள்? நம் கட்சியில் துடிப்புள்ள, படித்த இளைஞர்கள் இருக்கிறார்களே! அவர்களை தேர்ந்தெடுங்கள். அவர்கள் உழைப்புக்கு ஊதியம் கொடுங்கள். கட்சிகாரனை போட்டால் கட்சிக்காரன் தகவல்களை கசிய விடுவான், சரியான தகவல்களை தரமாட்டான், மாவட்ட செயலாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு அவர் தரும் தகவல்களை தருவான் என்று சந்தேகப்பட்டால்? சந்தேகமே வேண்டாம். நீங்கள் சந்தேகப்பட்ட படி நடந்து கொண்டது முன்பு ஐபேக் பணியாளர்களும், தற்போது பெரும்பாலான பென் பணியாளர்களும்தான்.

அவர்கள் பயணிப்பது மாவட்ட செயலாளர்கள் கார்களில் தான்,
அனுபவிப்பது அவர்கள் பணத்தில் தான். கூடை பந்து சங்கத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் விலை கொடுத்து வாங்கி தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவரான லாட்டரி மார்ட்டின் மருமகன் பென் டீம் நிர்வாகிகளை விலைக்கு வாங்க எவ்வளவு நேரம் ஆகும்..?

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இதையெல்லாம் சிந்தித்து நம் கட்சி விசுவாசிகளின் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள். அது தான் கட்சிக்கு பாதுகாப்பானது. ஐபேக், பென் டீம் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிந்திருக்குமே!

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்களின் சேட்டைகள் புரிந்திருக்குமே. கட்சிக்கு சிலர் செய்யும் துரோகங்களின் புள்ளி விவரங்கள் புரிந்திருக்குமே! அரசு பணி நியமனங்களில் எவ்வளவு பணம் வாங்கப்படுகிறது என்பது தெரிந்திருக்குமே? என்ன தகவல்கள் இதுவரை தலைமைக்கு தெரியும்?

கூலிக்கு வருபவனால் நமது கொள்கைகள் பாதிக்கப்படக்கூடாது. கொள்கை சார்ந்த வெற்றி பாதிக்கப்படக்கூடாது. இது சிறு பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டல்ல. சுயமரியாதை மிக்கவர்களின் கொள்கை கூடாரம் திமுக. இந்த கொள்கை கூடாரத்தை ஆட்டிபார்க்கும் வேலைகளை செய்ய நாம் காரணமாகிவிடக்கூடாது’’எனத் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: 25 தொகுதி வேண்டும்... திமுகவை திணறடிக்கும் திருமா கட்சி... ஆதவ் அர்ஜூனாவுக்காக ஆதங்கப்படும் விசிக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share