சென்னையை அலறவிட்ட முதியவர் ..நள்ளிரவில் பற்றி எரிந்த வாகனங்கள்..அதிரவைக்கும் காரணம்
வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் 60 வயது முதியவர் செய்த செயல் சென்னையில் உலுக்கி எடுத்துள்ளது
சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்த டிபி சத்திரம் பகுதியில் வினோத் என்பவரது வீட்டில் 60 வயது முதியவர் நடராஜன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் மனைவி சாந்தியுடன் நான்கு வருடங்களாக வினோத்தின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் நடராஜன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி சாந்தி இறந்துவிட்டார். இதனால் மது அருந்திவிட்டு அங்கு வசிப்போரிடம் நடராஜன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை வீட்டின் உரிமையாளர் வினோத் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில் நடராஜன் வினோத்தின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற நிலையில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றவர்களின் வாகனமும் பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அதிகாலை 2 மணி அளவில் திடீரென வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் .உடனடியாக கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் 5 இருசக்கர வாகனங்கள் தீயிற்கு இரையானது. வீட்டின் உரிமையாளர் மீது இருந்த கோபத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களின் இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலான நிலையில் டி.பி.சத்திரம் போலீசார் முதியவர் நடராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
இதையும் படிங்க: விலை உயர்ந்த கார்கள் அழியாமைக்கான தங்கச் சீட்டா..? முகத்தில் சிரிக்கும் அதிர்ஷ்டம்... இந்திய சாலைகளின் அவலம்..!
இதையும் படிங்க: அமைச்சர் பதவி தராவிட்டால்...? மிரட்டும் முக்கியத் தலைவர்... அடித்து ஆடும் பாஜக..!