நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையே அனைத்தையும் பேசும் என்பாதல், அதில் கவனமாக இருந்த பாஜக, தேசிய ஜனநாயக்கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும், வக்ஃபு வாரிய மசோதா குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்க வைத்து சாதித்துக் காண்பித்துள்ளது.
மக்களவையில் வக்ஃபு வாரிய மசோதாவுக்கு 288 எம்.பி.க்கள் ஆதரவும், 232 எம்.பி.க்கள் எதிர்ப்பும் பதிவானது. மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி.க்கள் ஆதரவும், எதிராக 95 வாக்குகளும் கிடைத்தன. இந்த முக்கியமான மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை தெளிவாக்கியது.

ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை கழுவும் மீனில் நழுவும் மீன்போல் தங்கள் கட்சி எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் அல்லது பங்கேற்கக்கூடாது என்று தெளிவான உத்தரவு ஏதும் கொறடா மூலம் பிறப்பிக்கவில்லை என்பதால், பாஜகவுக்கு ஆதரவாகவே மறைமுகமாக செயல்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வக்ஃபு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தபோது, இப்படிப்பட்ட சூழல் இல்லை. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததையடுத்து, உடனடியாக இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு மாற்ற மக்களவைத் தலைவர் பரிந்துரை செய்தார். ஆனால் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள ஆர்வத்துடன் இருந்தன.

பாஜக கூட்டணியில் இருக்கும் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், யுபிஎஸ்சி தேர்வில் லேட்டரல் என்ட்ரி முறையை கடுமையாக எதிர்த்தார், இந்த முறையால் எஸ்டி, எஸ்சி பிரிவினரின் இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். இதனால் இந்த மசோதா அறிமுகக் கட்டத்திலேயே மத்திய அரசு வைத்தது. அதேபோல ஒளிபரப்புச் சேவை மசோதாவுக்கும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் அந்த மசோதாவை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஏதோ திட்டத்துடன் முழுமையாக கூட்டணிக் கட்சிகளை ஆதரித்துச் சென்றது தெரிந்தது.
கூட்டணிக் கட்சிகளும் வலுவாக எதிர்த்து இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிறுத்திவைக்க வலியுறுத்தின. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு இணக்கமாகச் சென்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், வக்ஃபு மசோதாவை அறிமுகம் செய்து வெற்றிகரமாக இரு அவைகளிலும் நிறைவேற்றி முடித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசின் ராஜதந்திரமும், அரசியல் அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிகள், கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆக்கிரமித்து வந்த மேலாதிக்க அரசியல் நிலையை மீட்டெடுப்பதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களின் மாநிலத்தேவையைக் கருதி பாஜகவின் கோரிக்கைக்கு உடன்பட்டன. குறிப்பாக தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப்பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு கூடுதல் நிதி தேவை, திட்டங்கள் தேவை என்பதால், பாஜகவை தீவிரமாக ஆதிரிக்கிறார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவுன் கூடுதலாக நெருக்கத்துடன் உள்ளார், அங்கு ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறதா, அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா என்று தெரியாத அளவு நெருக்கமாவிட்டது. பாஜகவின் திட்டங்கள், செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் நிதிஷ்குமார் ஆர்வமாகி, தன்னுடைய அடையாளத்தையும் கட்சியின் சுயத்தையும் இழந்து வருகிறார்.

பீகாரில் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு துணையாக ஐக்கியஜனதா தளம், லோக் ஜன சக்தி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகிவை கூட்டமாக களமிறங்கி பாஜகவுக்கு வேலைபார்க்க உள்ளன. கூட்டணிக் கட்சிகளை வைத்தே சிறிது சிறிதாக பீகாரிலும் பாஜக சுயமாக ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு இணக்கமாகவும் சென்று, அதேநேரம், தனக்குரிய நோக்கத்தையும், குறிப்பாக வக்ஃபு சட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற பாஜக ராஜதந்திரியாக செயல்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி கடந்த காலத்தைவிடஇன்னும் நெருக்கமாகியுள்ளது.
இதையும் படிங்க: தலைமைக்கு தலைவலியாக மாறிய அண்ணாமலை... பாஜகவுக்கே சவால் விடும் 'மல'-யின் விழுதுகள்...!