புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன்விடுதி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதிய உணவு இடைவேளையில் தேவதாஸின் சித்தப்பா கலியபெருமாள் கடையில் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரில் இருந்து இறங்கி வந்த நபர், கடையில் இருந்த முதியவர் கலியபெருமானிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு கலியபெருமாள் கூலிங்கா? சாதாவா? என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை: வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி...

சாதா வாட்டர் என்று தண்ணீர் பாட்டில் வாங்க வந்தவர் தெரிவித்த நிலையில், அது முதியவர் காதில் விழுகாததால் மீண்டும் ஒரு முறை கூலிங்கா? சாதாவா? என்று கேட்டுள்ளார். இதனால் அவர் கோபமடைந்து முதியவரை திட்டி விட்டு தண்ணீர் பாட்டிலை வாங்கி கொண்டார். அதை காருக்கு சென்று கொடுத்து விட்டு பின்னர் மீண்டும் கடைக்கு வந்து கூலிங் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொண்டு முதியவரை திட்டிக்கொண்டு ஜிபேயில் பணம் செலுத்தினார்.

அப்போது அங்கு வந்த கடையின் உரிமையாளர் தேவதாஸ், வயதானவர் தானே.. கூலிங் வாட்டரா? சாதா வாட்டரா? என்றுதானே கேட்டார்..அதுக்கு ஏன் வயசு வித்யாசம் இல்லாமல் திட்டுறீங்க என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த இருவர் கடை உரிமையாளர் தேவதாஸிடம் தகராறில் ஈடுபட்டதோடு ஆபாச வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினர். கடையில் உள்ள பொருட்களையும் எடுத்து உடைத்து சூறையாடி சென்றனர். இது அந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஆடியோ உடன் வீடியோவும் பதிவாகி உள்ளது. மேலும் இதுகுறித்து கடையின் உரிமையாளர் தேவதாஸ், கரம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார். போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.


இதையும் படிங்க: காஞ்சிபுரத்தை அலறவிடும் ஹெல்மெட் திருடன்.. ஒரே நிமிடத்தில் ஸ்கூட்டி அபேஸ்..!