அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிக்கட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும் 15 ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “பொங்கல் போனஸ்” - 3 அல்ல 6 நாட்கள் விடுமுறை - யாருக்கெல்லாம் தெரியுமா?
அந்த வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 54 லட்சத்து 26 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி, வாடிவாசல் மற்றும் வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் இருக்கக்கூடிய இடங்களில் தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்ட நிலையில். இன்று விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலுக்கு முன்பு தேங்காய் நார்கள் கொட்டுவதும், தண்ணீர் தொட்டி வைப்பது மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?