பாஜக -அதிமுக கூட்டணி அமைத்துள்ளது தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடனேயே, அதிமுக- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ''வரவிருக்கும் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடைபெறும். தேசிய அளவில் கூட்டணியின் முகம் பிரதமர் நரேந்திர மோடியாக இருப்பார்.

1998 ஆம் ஆண்டு முதல், ஜெயலலிதா, வாஜ்பாய் காலத்தில், நாங்கள் ஒன்றாக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறோம். ஒரு காலத்தில் நாங்கள் 39 மக்களவைத் தொகுதிகளில் 30 இடங்களை ஒன்றாக வென்றிருந்தோம். பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல. நம்பிக்கை, சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான மிகப்பெரிய நட்பு இருந்தது. இரு தலைவர்களும் எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் இணைந்து ஒரு முடிவு… கைக்கோர்த்த அதிமுக – பாஜக... உறுதி செய்தார் அமித்ஷா!!

தேர்தலுக்குப் பிறகு பாஜக அரசி சேருவதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும். அதிமுக எந்த கோரிக்கைகளையும் வைக்கவில்லை. பாஜகவின் உள் விவகாரங்களில் எந்த தலையீடும் இல்லை. இந்தக் கூட்டணி இரு கட்சிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் தேர்தலை ஒன்றாகச் சந்திப்போம். அமைச்சர்களின் எண்ணிக்கை, தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தற்போது, மாநிலத்தில் உள்ள ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்றுவதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம்.

உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக சனாதன தர்மம் மற்றும் மொழி போன்ற பிரச்சினைகளை திமுக வேண்டுமென்றே எழுப்புகிறது. தமிழகத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சினை ஊழல். இந்த முறை மக்கள் வளர்ச்சிம, வெளிப்படைத்தன்மையை தேர்ந்தெடுப்பார்கள். அடல் பிஹாரி வாஜ்பாய், ஜெயலலிதா காலத்தில் இருந்த கூட்டணி இருந்தது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து கடந்த காலங்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்த முறையும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்குவார்கள்.

திமுக அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இதுவரை சுமார் ரூ.39,000 கோடி மதிப்பிலான ஊழல்களைச் செய்துள்ளது. அவற்றில் மதுபான ஊழல் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஊழல் ஆகியவை முக்கியமானவை. திமுக அரசின் மோசடிகளை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்த ஊழலுக்கு ஸ்டாலினையும், உதயநிதியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் திமுக ஊழல்கள் மீது மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுத்து மு.க.ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதுித் ஷாவின் பேச்சு உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு மோடி... தமிழகத்துக்கு எடப்பாடி... அதிமுகவை துள்ளாட்டம் போடவைத்த அமித் ஷா!