யானையிடம் சிக்கிய சோளப்பொறி போல் தமிழக பாஜகவிடம் சிக்கித் தவிக்கிறது திமுக அரசு. முன்பெல்லாம் ஆளும் அரசு ஏதாவது தவறு செய்துவிட்டால், அறிக்கை அல்லது ஒரு சப்பை கட்டு கட்டி விட்டு ஆட்சியில் இருப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். சோசியல் மீடியா அதிகமான காலத்தில் இருந்து அப்படி ஒரு தவறு நடந்து விட்டால் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியான அதிமுக பல விஷயங்களில் மௌனம் காத்து வரும் நிலையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுக அரசியலில் நடக்கும் தவறுகளை உடனுக்குடன் அவர்களே எதிர்பார்க்காத வகையில் அறிக்கையில் விட்டும் போராட்டங்களை நடத்தியும் அவர்களது தூக்கத்தை கெடுத்து வருகிறது பாஜக. குறிப்பாக பாஜகவின் ஐ.டி.விங்க், பட்டி தொட்டி என்று எங்கெல்லாம் திமுகவினரின் அராஜகம் நடக்கிறதோ, அதனை சுடச்சுட சோசியல் மீடியாவில் ஏற்றி வைரலாகி விடுகிறார்கள்.
இதையும் படிங்க: அரசியல் கோமாளி அண்ணாமலையே.. கெட் அவுட் மோடின்னு துரத்துவோம்.. திமுகவின் ராஜீவ் காந்தி ஆவேசம்.!

இதனால் ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நிம்மதி இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியான டாஸ்மாக் ஊழல் விவகாரம் ஒட்டுமொத்த திமுகவையும் டரியல் ஆக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, மத்தியில் ஆளும் அரசு பிஜேபி கையில் இருப்பதாலும் திமுக ஒரு பதற்றத்தோடுவே அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இ.டி, இன்கம் டேக்ஸ் போன்ற ரெய்டுகள் ஒரு பக்கம் ஒரு கலக்கத்துடனே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேறு திமுகவை சோசியல் மீடியாவிலும், ஊடகங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறார். விவாதத்திற்கு அழைப்பது சவால் விட்டு சொன்னதை செய்து காட்டுவது என அண்ணாமலையின் அதிரடிக்களை பார்த்து உ.பி.க்கள் அரண்டு போயுள்ளனர், என்றால் அதிமுக மிரண்டு போயுள்ளதாம் (வேற என்ன, எதிர்க்கட்சி நம்பள, இல்ல அவங்களான்னு தான்..?!).

தமிழக பாஜக மாநிலத் தலைவர், முன்னாள் காவல் அதிகாரி என்பதால் அண்ணாமலை தான் சூடாய் இருக்கிறார் என்று பார்த்தால், தமிழக பாஜகவினர் அதைவிட படுவேகமாய் உள்ளார்களாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆகஸ்ட் மாசம் ஒரு இடத்தில் சாதாரணமாக அண்ணாமலை மகளிர் அணி தலைவியோடு டிஸ்கஸ் செய்த அந்த ஒரு விஷயம் தற்போது தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆம், இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் முன்பாக பாஜக மகளிர் அணியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் போட்டோவை அணி அடித்து மாட்டி வருகின்றனர். அத்துடன் அப்பா இப்படி செய்வது நியாயமா? என ஒயின் ஷாப்புக்கு வெளியே ஸ்டாலின் போட்டோவை ஒட்டி கடுமையான தலைவலியை கொடுத்து வருகிறார்கள்.
படு ஆக்டிவாக களத்தில் இறங்கியுள்ள பாஜக மகளிர் அணியினரைப் பார்த்து, திமுக உடன்பிறப்புகளே ஓரங்கட்டி நிற்கிறார்கள். ஏற்கனவே இருக்குற 1000 கோடி ரூபாய் ஊழல் பஞ்சாயத்தே போதும், மகளிர் அணிக்கிட்ட சண்டைக்குப் போய் திமுகவின் பெயரை மேலும் கெடுக்க வேண்டாம் என ஒதுக்கிக்கொள்கிறார்களாம். இந்த விவகாரத்தில் அண்ணாமலை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டதாக கமலாலயம் குஷியில் இருக்கிறது.

ஆம், மகளிர் அணியினர் அமைதியான முறையில் டாஸ்மாக் வாசலுக்குச் சென்று போட்டோ மாட்டுவதால் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியாத நிலை இதன் மூலம் என்னை தடுக்கவே முடியாது என்பதை அண்ணாமலை நிரூபித்துவிட்டார். இன்னொன்று, போலீசாரின் தூக்கத்தைக் கெடுக்கிறேன் என்ற சபதத்திலும் வெற்றி பெற்றுள்ளார். டாஸ்மாக் முன்பாக முதல்வர் போட்டோ மாட்டும் செய்தியை தீயாய் பரவியதால் கடுப்பான அறிவாலயம், காவல்துறைக்கு இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே இருக்கும் பணிச்சுமையோடு, பாஜகவை பகைத்துக்கொண்ட பணிச்சுமை வேறு காவல்துறையின் தோள்களில் ஏறியுள்ளது.

தமிழை வைத்து மத்திய அரசுக்கு நெட்டு கட்ட நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு, டாஸ்மாக்கை வைத்து அண்ணாமலை ஆப்பு வைத்துவிட்டார் என சோசியல் மீடியாக்களில் பேச்சு கிளப்பியுள்ளது. இதனால் அப்பா ஸ்டாலினின் நிம்மதி மட்டுமல்ல, மகன் உதயநிதியின் நிம்மதியும் போச்சாம். முன்பெல்லாம் மிகவும் சந்தோஷமாகவும் ரிலாக்ஸ்சாகவும் இருந்த உதயநிதி ஸ்டாலினை, தற்போது அப்படி பார்க்க முடிவதில்லை. இதற்கு மிகுந்த அரசியல் அழுத்தமே காரணம் என சொல்லப்படுகிறது. இருக்கிற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் போதாது என்று சோசியல் மீடியாக்களில் நாளொறு வண்ணம், பொழுதொரு மேனி என கிளம்பி வரும் பஞ்சாயத்துக்களை வேறு பார்க்க வேண்டியுள்ளதால் திமுக கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே ஆட்டம் கண்டு போயுள்ளார்கள் எனக்கூறப்படுகிறது. இனி வருங்காலங்களிலும் யார் ஆட்சி அமைத்தாலும் இதே நிலைமை தான் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடியிசம்.. அவமானமாக இல்லையா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!