டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கோண்டிருக்கின்றன. 2013-க்குப் பிறகு முதல் முறையாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் -பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அனைவரும் முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த முறை தேர்தலில், ஆம் ஆத்மி- பாஜகவுடன் சேர்ந்து, காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன.வாக்கு எண்ணிக்கையில் 10 முக்கிய இடங்களில் எந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளன, யார் பின்தங்கியுள்ளனர்?
முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் வலுவான தலைவர் பிரவேஷ் சாஹிப் சிங் வர்மா போட்டியிட்டார். அதே நேரத்தில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் முன்னாள் எம்பியுமான சந்தீப் தீட்சித்தும் களமிறங்கினார். மும்முனைப் போட்டி நிலவும் ஒரு சில இடங்களில் புது தில்லியும் ஒன்று. அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடவை சந்தித்துள்ளார்.

முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சி சார்பாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். பாஜக அவருக்கு எதிராக ரமேஷ் பிதுரியை களமிறக்கியது.காங்கிரஸ் கட்சியின் சார்பாக அல்கா லம்பா, கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அல்கா லம்பா ஒரு காலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவராக இருந்தார். அதிஷி ரமேஷ் பிதுரி முன்னிலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக போட்ட ஸ்கெட்ச்... தீய சக்தி என திட்டி தீர்த்த முத்தரசன்...!
ஜங்புரா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார்.அவர் கடந்த தேர்தலில் தனது பாரம்பரிய பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தக் காரணத்திற்காக அவர் இந்த முறை தனது தொகுதியை மாற்றிக் கொண்டு பட்பர்கஞ்சிலிருந்து ஜங்புராவை தேர்வு செய்தார். அங்கு, மனிஷ் சிசோடியாவை எதிர்த்து பாஜகவின் சர்தார் தர்விந்தர் சிங் மர்வாவையும், காங்கிரஸ் கட்சியின் வலுவான வேட்பாளர் ஃபர்ஹாத் சூரியையும் எதிர்த்துப் போட்டியிடுகிறார். மனிஷ் சிசோடியா முன்னணியில் இருக்கிறார்.
டெல்லி அமைச்சர் கோபால் ராயால் பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. இங்கு, ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராயை எதிர்த்து பாஜகவின் அனில் வசிஷ்டாவும், காங்கிரஸின் முகமது இஷ்ராக் கானும் போட்டியிடுகின்றனர். இங்கு கோபால் ராய் முன்னணியில் இருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அமானத்துல்லா கானின் ஓக்லா சட்டமன்றத் தொகுதியில் ஏஐஎம்எஐஎம் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்த தொகுதியின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இங்கு அமானுல்லா கானுக்கு எதிராக டெல்லி கலவர குற்றவாளி ஷிஃபா-உர்-ரஹ்மானை ஏஐஎம்எஐஎம் களமிறக்கியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தனது வேட்பாளராக அரிபா கானை நிறுத்தியுள்ளது. மூன்று முஸ்லிம் முகங்களில், பாஜகவைச் சேர்ந்த மனிஷ் சவுத்ரி ஓக்லாவில் முன்னணியில் இருக்கிறார்.
சர்ச்சைக்குரிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பாரதி டெல்லியின் மால்வியா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மறுபுறம், சோம்நாத் பாரதிக்கு எதிராக போட்டியிட பாஜக சதீஷ் உபாத்யாயையும், காங்கிரஸ் ஜிதேந்திர குமார் கோச்சரையும் நிறுத்தியுள்ளது.சோம்நாத் பாரதி முன்னணியில் இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கைலாஷ் கெலாட் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பிஜ்வாசன் தொகுதியில் பாஜக கைலாஷ் கெலாட்டை வேட்பாளராக நிறுத்தியது. அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சுரேந்திர பரத்வாஜ் போட்டியிடுகிறார், காங்கிரஸில் இருந்து தேவேந்திர செஹ்ராவத் போட்டியிடுகிறார்.பாஜகவின் சுரேந்திர பரத்வாஜ் முன்னணியில் இருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராக்கி பிர்லானை மடிப்பூரில் இருந்து நிறுத்தியுள்ளது. இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஊர்மிளா கைலாஷ் கங்வாவும், காங்கிரஸ் சார்பில் ஜேபி பன்வாரும் போட்டியிடுகின்றனர்.பாஜகவின் ஊர்மிளா கைலாஷ் முன்னணியில் இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது தலைவரான மணீஷ் சிசோடியா கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை அவர் ஜங்புராவில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி கட்சி மனீஷுக்குப் பதிலாக பட்பர்கஞ்ச் தொகுதியில் அவத் ஓஜாவை நிறுத்தியது. அவர் பாஜகவின் வலுவான முகமான ரவீந்தர் சிங் நேகாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தனது வேட்பாளராக சவுத்ரி அனில் குமாரை நியமித்துள்ளது.
ஆம் ஆத்மியின் அவத் ஓஜா முன்னணியில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ 15 கோடி ஆஃபர்... டெல்லியில் குதிரை பேரம்..? பாஜக மீது பரபர குற்றச்சாட்டு..!