ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என குறிவைத்து செயல்பட்டு வருகிறது. இந்த இடைத் தேர்தலில் அதிமுகவின் திட்டம் என்னவென்றால், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் வாக்குகளுக்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறது.
விஜய் இடைத் தேர்தலில் நிற்கபோவது இல்லை. எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து பரிசோதனை செய்ததுபோல, விஜய் நிற்கவைக்க வில்லை. அவர் நேரடியாக 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். அப்படி என்றால் அதிமுகவுக்கு கூட்டணி யார் வருவது?

அமித்ஷா விவகாரத்தில் விசிக, திமுக, காங்கிரஸ் என அனைவரும் எதிர்ப்பு இயக்கம் நடத்துகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் அதிமுக வாயே திறக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்காமல், ஜெயக்குமார் தெரிவித்ததே தனது கருத்து என்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் குறித்தும் அதிமுக வாய் திறக்கவில்லை. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உத்தரபிரதேச நீதிமன்ற நீதிபதி மீதான தகுதி நீக்க விவகாரத்திலும் அதிமுக கையெழுத்து போடவில்லை.
இதையும் படிங்க: பதுங்கும் எடப்பாடி... ஒதுங்கும் பாஜக... ஜி.கே.வாசன் தலையை பதம் பார்க்க ரெடி... அண்ணாமலையின் அடடே அரசியல் கணக்கு
ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக – பாஜக நெருக்கம் உருவாகிறது. இதற்கு தடை யார் என்றால் அண்ணாமலை தான். இதனால் உடனடியாக அவரது மைத்துனர் சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. சிவகுமாருக்கு நெருக்கமான செந்தில் என்பவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது.

அரவக்குறிச்சி தேர்தலுக்கு கொடுத்த பணத்தில் அவர்கள் செங்கல்சூளை அமைத்தார்கள். அதற்காக உக்ரைனில் இருந்து இயந்திரங்கள் வாங்கினர். கோடிக்கணக்கில் சீட்டுப்பணம் நடத்தினார்கள். மேலும், தங்களுடைய பணத்தில் கோவையில் 7.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். செந்தில், சிவகுமார் வீட்டில் ரெய்டு நடப்பது என்பது அண்ணாமலை வீட்டிலேயே ரெய்டு நடைபெற்றது போலத்தான். அதிமுக கூட்டணிக்கு நோ செல்லாதே என்பதற்காகத்தான் இந்த ரெய்டு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என கூறினார். அப்போ ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இருவரும் சங்கமம் ஆகிவிட்டார்கள். அப்படி கூட்டணி அமையா விட்டால் என்னாகும். இரட்டை இலை வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி முரண்டு பிடித்தால் சின்னத்தை முடக்கி, பாஜகவை போட்டியிட வைத்து 2ஆம் இடத்தை பிடித்து விடுவார்கள். எனவே பாஜக – அதிமுக கூட்டணி என்பது கன்பார்ம்.
அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி என சொன்னது விஜய் கட்சி குறித்துதான். அவர் பேசுகிறார். ஆனால் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. இதேபோல் சீமானுடனும் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. இதனால் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணிதான் உறுதியாக அமையும்.
திமுக கூட்டணியில் இருந்து செல்வதாக கூறப்படும் விசிக, தவாக ஆகிய கட்சிகள் பாஜக எதிர்ப்பை அடிப்படையாக கொண்டவை. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் இவர்கள் அங்கு செல்ல முடியாது. எனவே திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே தான் மோதல் உள்ளது. நடுவில் விஜய், சீமான் தனிப்பட்ட ரோல்தான் செய்வார்கள்.
இதனையொட்டி பாஜக - அதிமுக கூட்டணி உருவாக வேண்டும் என்றால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக்கூடாது என எடப்பாடி கிடுக்குப்பிடி போடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்துப்பேசிய அண்ணாமலை பாஜகவுக்கு எவ்வளவு முக்கியம் என ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘‘1967-க்குப் பிறகு தமிழ் மண்ணில் புதையுண்டு கிடந்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 1991 -ல் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கிக் கொடுத்து தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தவர் அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த மாவீரன் வாழப்பாடி ராமமூர்த்தி.
ஆனால், அந்த மகத்தான மதிநுட்பமிக்க தலைமையை ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு வந்த சீதாராம் கேசரியின் கூறுகெட்ட அகில இந்திய தலைமை நீக்கம் செய்துவிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தங்கபாலுவை நியமனம் செய்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸை புதைகுழிக்கே கொண்டு சேர்த்தது.
பிறகென்ன இன்றுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவின் ஒட்டுத் திண்ணையில் உயிர் வாழ்ந்து வருவது தான் பரிதாபம். ஆக தரிசாக கிடந்த நிலத்தை விளைச்சலுக்கு ஏற்ப பண்படுத்தி முழுமையான மகசூலுக்கு முன்பு நிலத்தை தயார்படுத்திய உழவனை மாற்றுவதும் ஒரு கட்சிக்கு புத்துயிர் கொடுத்த தலைமையை மாற்றுவதும் உகந்தசெயல் அல்ல என்பதற்கு வாழப்பாடியாரின் வரலாறு ஒரு சாட்சியானது.
ஆம்… ஒரு தலைமையை மாற்றினால் தான் ஒரு கட்சி உருப்படும் என்பதற்கு வாழப்பாடியாரே சான்று. ஒரு கட்சியின் தலைமையை மாற்றுவதால் முளைவிட்டுக் கிழம்பிய கட்சி முழுமை பெறும் முன்பே முடிந்து போகும் என்பதற்கும் வாழப்பாடியாரே சாட்சி.
அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகுதான் இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் அக்கட்சிக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரும் நிலையில், அதை முளையிலேயே கிள்ளியெறிய சிலர் சதிவலைப் பின்னுவதை என்னவென்று சொல்ல..?’’ என ஆதங்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !