தமிழகத்தில் பெரிய அளவில் பரபரப்பான அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் இந்திய அரசியலில் தொடர்ந்து தனது தடங்களை அவ்வப்போது வாசன் பதித்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியின் உத்தரவுகளை தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகள் இடையே செயல்படுத்தியவர் ஜி.கே வாசன் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,அந்த அளவிற்கு மோடி வாசன் மீது நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளார் என்கின்றனர் டெல்லி அரசியல் வட்டாரத்தினர்.

ஜி.கே வாசனின் தந்தை அகில இந்திய அளவிலான மிகப்பெரிய காங்கிரஸ் தலைவரான ஜி.கே மூப்பனார் மீது மோடிக்கு எப்போதுமே அளவு கடந்த மரியாதை உண்டாம், மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான அரசியல்வாதி என்பதால் இவர்கள் மீது மோடிக்கு அந்த ஈர்ப்பு ஏற்பட்டதாம்.
இதையும் படிங்க: நாவடக்கமே இல்லை.. ரொம்ப அநாகரிகம்.. சுயநினைவற்றவரைப் போல பிதற்றி திரியும் அண்ணாமலை..! ஷாப்ட் ஆக பொங்கும் மா.சு..!!
அதனால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட வாசனுக்கு இரண்டு தொகுதிகள் அதாவது தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய தொகுதிகளை ஒதுக்கி கொடுக்கப்பட்டதாம்.
புது தில்லியில் அசோகா சாலையில் அமைந்துள்ள எம்பி களுக்கான பங்களாவில் குடியிருக்கும் ஜிகே வாசன் மத்திய அரசு தொடர்பான முக்கிய நிகழ்வுகள் மற்றும் பாஜகவினரின் திருமணங்கள் ஆகியவற்றில் தவறாமல் கலந்து கொள்கிறார்,

அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற டெல்லி புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ஜி.கே வாசன் கலந்து கொண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரேகாகுப்தா மற்றும் துணை முதலமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோரை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் புதிதாக பதவி ஏற்றுள்ள புதிய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், ஜி.கே வாசனிடம் வாழ்த்து பெற்றனர்.
இதையெல்லாம் பார்க்கும் போது கிட்டத்தட்ட ஜி.கே வாசன் ஒரு பாஜகவின் முகமாகவே மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா..!