2023-24ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் 88 சதவீதம் பாஜக மட்டுமே பெற்றுள்ளது, பாஜக மட்டும் ரூ.2,243.97 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் சார்பி்ல ரூ.2,544.27 கோடி நன்கொடை வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023-24ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளன. அதை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு பெற்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;
இதையும் படிங்க: பொய் வாக்குறுதி... மக்களை ஏமாற்றுவதில் பாஜக- திமுக இரட்டைக் குழல் துப்பாக்கி: விஜய் கடும் எச்சரிக்கை..!
2023-24 நிதியாண்டில் தேசியக் கட்சிகள் சார்பில் பெற்ற நன்கொடை 2022-23ம் ஆண்டில் பெற்ற நன்கொடையைவிட ரூ.1,693.84 கோடி அதாவது 199.17% அதிகமாக வசூலித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் சார்பி்ல ரூ.2,544.27 கோடி நன்கொடையாக தேசியக் கட்சிகள் வசூலித்துள்ளன. இந்த நன்கொடையில் 88 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது. அதாவது 8358 பேரிடம் நன்கொடையாக ரூ.2,243.94 கோடி நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 1994 பேரிடம் நன்கொடையாக ரூ.281.48 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற நன்கொடையைவிட 6 மடங்கு கூடுதலாக பாஜக நன்கொடை பெற்றுள்ளது.
2022-23ம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ.719.858 கோடிதான் நன்கொடையாகக் கிடைத்தது. ஆனால், 2023-24ம் ஆண்டில் பாஜகுவுக்கு நன்கொடையாக ரூ.2243.95 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது, ஏறக்குறைய 211.72% கூடுதலாகக்கிடைத்துள்ளது.

2022-23ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.79.92 கோடி நன்கொடை கிடைத்த நிலையில் 2023-24ம் ஆண்டில் ரூ.281.48 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது.ஏறக்குறைய 252 சதவீதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் நன்கொடை 2022-23ம்ஆண்டில் கிடைத்த நன்கொடையைவிட, 2023-24ம் ஆண்டில் நன்கொடை 70.18 சதவீதம் குறைந்து, ரூ.26.03 கோடிதான் கிடைத்துள்ளது. தேசிய மக்கள் கட்சிக்கு நன்கொடை 2023-24ம் ஆண்டில் முந்தைய ஆண்டில் கிடைத்த தொகையைவிட 98% குறைந்து, ரூ.7.331 கோடிதான் கிடைத்துள்ளது.

மாநில அளவில் டெல்லி அதிகபட்சமாக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் இருக்கிறது, டெல்லியில் இருந்து மட்டும் ரூ.989.20 கோடி நன்கொடை தரப்பட்டுள்ளது. அடுத்ததாக குஜராத்தில் இருந்து ரூ.404.512 கோடியும், மகாராஷ்டிராவில் இருந்து ரூ.334.07 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடைகளில் 89 சதவீதம் கார்ப்ரேட் மற்றும் தனிநபர்கள் அளித்த நன்கொடையாகும். இவர்கள் மட்டும் ரூ.2,262 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். தனிநபர்கள் மட்டும் ரூ.270 கோடி நன்கொடை அதாவது 10 சதவீதம் அளித்துள்ளனர்.

கார்ப்பரேட் நன்கொடையில் பாஜக மட்டும் ரூ.2,064 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது, தேசியக் கட்சிகள் சார்பில் கார்ப்பரேட் நன்கொடை ரூ.197 கோடி என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நன்கொடை அளவில் 9 மடங்கு அதிகமாக பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கார்ப்பரேட் நன்கொடையாக ரூ.190 கோடியும், தனிநபர்கள் வாயிலாக ரூ.90 கோடியும் பெற்றுள்ளது.
இவ்வாறு ஏடிஆர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!