×
 

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே..? மத்திய அரசைக் கண்டித்து திமுக போராட்டம்..!

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதி எங்கே என மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4034 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை எனக்கூறி மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதுமும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் சுருக்கமாக 100 நாள் வேலைத்திட்டம். நாடு முழுவதும் பஞ்சாயத்து அளவில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் அது பின்பற்றப்பட்டே வருகிறது. 

இதையும் படிங்க: தமிழக மக்களை முட்டாளாக்கும் ஸ்டாலின்… திமுகவை வேறோடு பிடுங்குவோம்..! அமித் ஷா ஆவேசம்..!

ஆனாலும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியினை கடந்த 5 மாதங்களாக மத்திய அரசு விடுக்கவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தி பேசியிருந்தார். 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் வட்டியுடன் தரவேண்டும் என்பதே விதி. ஆனால் 5 மாதங்களாக மொத்தம் 4,034 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதே, வட்டி போட்டு தருவீர்களா என கோரி இருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசனி, தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.7,300 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது என்றார். ஆனாலும் நிலுவைத்தொகை குறித்து அவர் பதிலளிக்கவில்லை. 

இந்நிலையில் 4,034 கோடி ரூபாயை விடுவிக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 850ஒஒன்றியங்களில் 1170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக முன்னெடுத்துள்ளது. 

ஆர்பாட்டத்தில் பங்கேற்றோர், மத்திய அரசுக்கு முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். வஞ்சிக்காதே வஞ்சிக்காதே, நிதி எங்கே நிதி எங்கே என்று அவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல்… நிர்மலா சீதாரமனை சந்தித்து உண்மையை உரைத்த கே.பி.ராமலிங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share