இன்று மட்டும் 46 லட்சம் பேர்... 300 KM ட்ராபிக்..! 48 மணி நேரம் சிக்கித் தவிப்பு..! அதிர வைக்கும் மகா கும்பமேளா
300 KM ட்ராபிக்..! 48 மணி நேரம் சிக்கித் தவிப்பு..! அதிர வைக்கும் மகா கும்பமேளா
மகா கும்பமேளாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து ஒட்டுமொத்த பிரயாக்ராஜ் மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்றே சொல்லலாம்.
கும்பமேளாவின் முக்கிய பகுதியான வசந்த் பஞ்சமியின் அமிர்த குளியலுக்கு சில நாட்களுக்குப் பிறகு கூட்டம் குறைய கூடும் என்று அனைவரும் நம்பி இருந்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக வசந்த் பஞ்சமி நிறைவடைந்தும் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரே நாளில் 46 லட்சம் பேர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து மொத்தமாக குவிந்துள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் கான்பூர் சாலையில் மொத்தம் 300 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் பம்பர் டு பம்பர் என்னும் வகையில் போக்குவரத்து நெரிசலோடு ஊர்ந்து சென்று இருக்கின்றன.
இதையும் படிங்க: பிரக்யாராஜில் மோடி..! பிரதமர் புனித நீராடுவதால் வரலாறு காணாத பாதுகாப்பு...
அதிலும் 50 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு பத்திலிருந்து 12 மணி நேரம் ஆனது என்று கும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் சுமார் 48 மணி நேரம் வாகனங்கள் சாலையில் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரத்திற்கு வெளியே 25 கிலோ மீட்டர் தூரமும் வாகனங்கள் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாலைகளில் ஸ்தம்பித்து பல மணி நேரமாக சாலையிலே கிடந்து தவித்தனர்.
இந்த பிரம்மாண்ட போக்குவரத்தை நிர்வகிப்பது மிக கடினமான வேலையாக இருந்ததால் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் வாகன போக்குவரத்தை போலீசார் நிறுத்தி முடக்கி வைத்தனர். 200-ல் இருந்து 300 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் மத்திய பிரதேசத்திலிருந்து யாரும் இன்று செல்ல வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
வார இறுதி நாள் என்பதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும் இந்த நிலைமை இன்னும் ஓரிரு நாட்களில் சீரடையை வாய்ப்புள்ளதாகவும் உபி மாநிலத்தின் ரேவா மண்டல காவல்துறை தலைவர் சாகெத் பிரகாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வாகனங்கள் தணிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வாரணாசி லக்னோ மற்றும் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பாதைகளில் 25 கிலோ மீட்டர் வரை நெருசில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகா கும்பமேளா நடைபெறும் நகரத்திற்குள் கூட சுமார் 7 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளது.
இந்த கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பிரயாக்ராஜ் சங்கமம் ரயில் நிலையமும் மூடப்பட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே அதிகமான கூட்டம் கூடி இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதால் ரயில்வே நிலையத்தில் இழுத்து மூடிவிட்டதாக ரயில்வே அதிகாரி கூறினார்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல கிலோமீட்டர் தூரம் அளவிற்கு ஒற்றை வழி பாதையாக மாற்றும் வேலைகளை உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 44 கோடிக்கு மேல் பக்தர்கள் புனித நீராடி உள்ளதால் மேலும் இந்த கூட்டம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசல் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது நகரத்தில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கும் வழி வகுத்துள்ளது எனவும் அகிலேஷ் யாதவ் குறை கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பமேளாவில் யாரும் எதிர்பாராத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதால் உத்தரப்பிரதேச அரசு விழிப்புதுங்கி நிற்கிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: மஹாகும்ப் செக்டார் 21 கூட்ட நெரிசல்… பிரயாக்ராஜில் 5 -7 பேர் இறப்பு..!