Breaking News: A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி- பாஜக பிரமுகர், பிரபல ரவுடி படப்பை குணா கைது..!
தற்போது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் படப்பை குணாவை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த A+ சரித்திர பதிவேடு குற்றவாளியும், பாஜக பிரமுகருமான படப்பை குணா விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோகன் என்பவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் சுங்குவார்சத்திரம் போலீஸார் கைது செய்தனர்.பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார் படப்பை குணா; இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி எனகிற படப்பை குணா குணசேகரன்இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது. குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
பல வழக்குகளில் ரவுடி படப்பை குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அப்போது ரவுடி படப்பை குணாவை பிடிக்க என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான டி.எஸ்.பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படை 2022ல் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!
இந்நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில் காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குள்பட்டு நடத்தப்படுவார் என வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் பல வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி படப்பை குணா கடந்த 2022ம் ஆண்டு சைதாப்பேட்டை 17ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பூந்தமல்லி கிளைக்கு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் குணா கடந்தாண்டு நவம்பரில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். அப்போது கட்சி பணிகளில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் படப்பை குணா செய்து வந்தார்.
2023ம் ஆண்டு பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.50க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி பாஜகவில் பதவியா? என எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் தற்போது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுங்குவார் சத்திரம் காவல்துறையினர் படப்பை குணாவை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தமிழகத்தின் பகைவர்கள்... பாஜக, நாதக கட்சிகளை போட்டுத் தாக்கிய திமுக!