10 நாட்கள் அடாவடி.. அலறவிட்ட புல்லட் ராஜா யானை ..ஆனைமலைக்கு கொண்டு சென்ற வனத்துறை
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனப்பகுதியில் விட புல்லட் ராஜா யானையை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர் வனத்துறையினர்
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனப்பகுதியில் விட புல்லட் ராஜா யானையை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர் வனத்துறையினர் .
நீலகிரி மாவட்டம் கொலப்பள்ளி ,சேரம்பாடி ,சேரன் காடு ,அய்யன் கொல்லி ஆகிய பகுதிகளில் சுமார் பத்து நாட்களாக அடாவடி செய்து வந்தது புல்லட் ராஜா என்று அழைக்கப்படும் காட்டு யானை நாற்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும் தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வந்த புல்லட் ராஜாவை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் போராடி வந்தனர்
வனத்துறை தலைவர் சீனிவாச ரெட்டி தலைமையில் ட்ரோன் மூலம் புல்லட் ராஜாவின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் அய்யன் கொல்லி பகுதியில் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது
இதையும் படிங்க: இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!
பின்னர் மயக்க நிலையில் புல்லட் ராஜா யானையை லாரியில் ஏற்றிய வனத்துறை அதிகாரிகள் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனப்பகுதியில் விடுவதற்காக பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்
யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நீலகிரி தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .
இதையும் படிங்க: அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும் ..போராடவும் தெரியும்.. கர்ஜிக்கும் திருமா