×
 

அண்ணாமலை தாண்டா இங்க கெத்து..! உள் கட்சி எதிரிகளின் வயிற்றில் புளியை கரைத்த அமித்ஷா..!

அண்ணாமலை தாண்டா இங்க கெத்து..!

முன்னாள் துணை குடியரசு துணை தலைவரும் முன்னாள் பிஜேபி தூண்களில் ஒருவரான வெங்கைய நாயுடுவின் பேரன் திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்று முடிந்தது. சென்னை மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கால்டன் சமுத்ரா என்னும் நட்சத்திர ரிசார்ட்டில் இநத திருமணம் நடைபெற்றது.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இந்த ரிசாட்டில் விஐபிகள் வருகையை  அடுத்து மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சென்னை போட் கிளப் பகுதியில் வசித்து வரும் வெங்கையா நாயுடுவின் மகள் வழி பேரன் திருமணம் தான் இது.

இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று அடைந்தார். அங்கு மணமக்களை வாழ்த்திய அமித்ஷா பின்னர் திரும்பி வருகையில் ஓரமாக நின்று கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டதும் கையைப் பிடித்து வேகமாக இழுத்து மணமக்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்தினார் பவ்யமாக இருந்த அண்ணாமலையும் அமித் ஷா மீது உள்ள மரியாதையோடு மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படிங்க: முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.!

இதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது அதாவது மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் இருவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள எந்த ஒரு அரசு பொறுப்பிலும் இல்லாத மாநிலக் கட்சித் தலைவரான அண்ணாமலையை முன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார் அமித்ஷா வி.வி.ஐ.பி களுக்கான முகத்தில் அடிக்கும் லைட் வெளிச்சத்தோடு அண்ணாமலை சங்கடத்தோடு முன் சீட்டில் அமர்ந்து பயணித்தார்.

இந்த காட்சிகள் நேரடி ஒளிபரப்பிலும் வாட்ஸ் அப்பிலும் வேகமாக பரவியது இது அண்ணாமலையின் முக்கியத்துவத்தை இங்குள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் உட் கட்சி எதிரிகளுக்கு உணர்த்தவே வேண்டும் என்று அமித்ஷா முன்னுரைக்கியில் அமர வைத்து மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த மரியாதை அளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அண்ணாமலை தற்போது சாட்டையால் அடித்துக் கொண்டதும் மேலும் திமுக வை ஆட்சியில் இருந்த அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்ற சபதம் எடுத்து வேலை செய்வதும் அமித் ஷாவை மிகவும் கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு தமிழக பாஜகவில் நிலவும் மறைமுக கோஷ்டி பூசல் பற்றியும் அறிந்து கொண்ட அமித்ஷா தாங்கள் அடுத்த அறிவிப்பு சொல்லும் வரை அண்ணாமலை தான் இங்கு கெத்து என சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அமித்ஷா என குதுக்களிக்கின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். எது எப்படியோ அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த அதி முக்கியத்துவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்

இதையும் படிங்க: ஆளுநர் பதவியின் கண்ணியம் காக்கணும்.. நடத்தை விதிகள் கொண்டு வாங்க.. நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திமுக முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share