‘சனாதனத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும் கும்பமேளாவுக்கு வரலாம்’: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு...
முஸ்லிம்களும் பிரயாக்ராஜ்ஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் சனாதன பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிம்களும் பிரயாக்ராஜ்ஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்கலாம் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அகார பரிஷத்தைச் சேர்ந்த துறவிகள் மாகா கும்பமேளா பகுதிக்குள் முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மகா கும்பமேளா பண்டிகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பணிகள் குறித்து நேற்று முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
அப்போது முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய சனாதனாத்தின் மீது நம்பிக்கையுள்ள எந்த முஸ்லிமும், தங்களின் அடையாளம் இந்திய கலாச்சாரத்தோடு தொடர்புடையது என நினைக்கும் எந்த முஸ்லிம்மும் மகா கும்பமேளாவுக்கு வரலாம். தவறான எண்ணத்துடன் வருவோரை சமாளிக்கவும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..!
இஸ்லாம் மதத்தை ஏற்கக் கோரி பல நூறு ஆண்டுகளுக்கு முன் மன்னர்களால் கொடுக்கப்பட்ட அழத்தத்தால் முன்னோர்கள் மதம்மாறியுள்ளனர் என்று நினைக்கும் முஸ்லிம்கள், இப்போதும் சனாதனத்தின் மீது நம்பிக்கை இருந்தால், கோத்ரத்தோடு இணைந்திருந்தால், அவர்கள் கும்பமேளாவுக்கு வரலாம், அங்கு புனித நதியில் நீராடலாம். இதுபோன்ற மக்கள் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மகா கும்பமேளா நடக்கும் பகுதியில் உள்ள நிலங்கள் தங்களுக்குச் சொந்தம் என வக்பு வாரியம் முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்ல, வக்பு வாரியத்தன் கீழ் இப்போது இருக்கும் நிலம், சொத்துக்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் தரப்படும் என முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு ராஜா குடும்பத்துக்கு ..திடீர் உடல் நலக்குறைவு ..மருத்துவமனையில் கங்கை அமரன்..!