×
 

முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்? உளவுத்துறை பிடியில் சிக்கியுள்ளாரா புஸ்ஸி ஆனந்த்?  விஜய் குறித்த அவதூறை பரப்பும் நுனிப்புல் ஊடகங்கள் 

புஸ்ஸி ஆனந்த் உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கிறார், கட்சியின் உள் தகவல்கள் உடனடியாக லீக் செய்யப்படுகிறது, என ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோக்கள் வெளியாவதும், அதன் மூலம்  ஊடகங்கள் தவறாக அவதூறு பரப்புவது நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?

ஜான் ஆரோக்கியசாமி இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் ஜான் ஆரோக்கிய விஜய் பற்றி பேசியதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. பலரும் ஆடியோவை புரிந்து கொள்ளாமல் தங்கள் போக்குக்கு விமர்சனம் செய்வதை காண முடிகிறது. ஆனால் ஆடியோவை கூர்ந்து கவனித்தால் ஜான் ஆரோக்கிய சாமி ஆடியோவில் பேசுவது அனைத்தும் புஸ்ஸி ஆனந்தை சுற்றியே உள்ளது தெரியும்.

ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் மோதலை பயன்படுத்தி ஏதோ ஒருவகையில் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோக்கள் வெளியிடப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி மனம் வெறுத்து யாரிடமோ பேசியது அந்த நபர் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு அல்லது புஸ்ஸி ஆனந்த் தரப்பினருக்கு அளிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் ஜான் ஆரோக்கியசாமியை விஜய்யை விட்டு விலக வைப்பது, தவெகவுக்குள் சிக்கல் என்கிற தோற்றத்தை உருவாக்குவது மட்டுமே. இதற்கு ஊடகத்தில் உள்ள நுனிப்புல் மேய்பவர்கள் எளிதில் இரையாவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதை வைத்து மற்ற விஷயங்களை மடைமாற்றிவிடலாம், தவெகவுக்குள் குழப்பத்தை எற்படுத்தலாம் என்கிற நோக்கத்தில் இந்த ஆடியோக்கள் வெளியாகிறது.

இதையும் படிங்க: மாற்றம் முன்னேற்றம்... விஜய் தேர்வு செய்த 3 இடங்கள்... தொண்டர்கள் உற்சாகம்,.. ஆட்சியாளர்களுக்கு தலைவலி

முதல் ஆடியோவால் கடுப்பான விஜய் பல விஷயங்களை புஸ்ஸி ஆனந்த் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. விசுவாசியாக இருந்தாலும் கட்சியின் வளர்ச்சிக்கு புஸ்ஸி ஆனந்த் பெரும் தடையாக இருக்கிறார், ஆதாயம் பார்க்கிறார், தன்னுடை சுய நம்பிக்கையின்மை, தனது இருப்பு போய்விடும் பயம் காரணமாக கற்றறிந்தவர்களை, அரசியல் அறிந்தவர்களை கட்சிக்குள் உள்ளே விடாமல் புஸ்ஸி ஆனந்த் பார்த்துக்கொள்கிறார் என்பதையும் விஜய் தெரிந்துக்கொண்டார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதுபற்றி யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான் ஆரோக்கியசாமியின் இரண்டாவது ஆடியோ வெளியிடப்படுகிறது. இதை வெளியிடும் நபர் உளவுத்துறைக்கு வேண்டியப்பட்டவர் என்பதால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதன் நோக்கம் பலராலும் கூர்ந்து பார்க்கப்பட்டது. அதில் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக பல வசனங்கள் வெட்டி ஒட்டப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களில் பேசப்படும் வாக்கியங்களை அவரவர்கள் அவரவர் கோணத்தில் கேட்டு நுனிப்புல் மேய்வதை பார்க்க முடிகிறது. 

விஜய் கிட்ட மேடத்தை வைத்து 2016,19, 21, சமீபத்தில் 2024 வரை முயற்சி செய்தார், அவரை வெளியில் அனுப்பினால் நான் என்ன செய்வது என்கிற வாதத்தை மேடம் என்றால் என்று பல ஹேஷ்யங்களை சொல்கிறார்கள். மேடம் என்று புஸ்ஸி ஆனந்த் சொன்னது விஜய்யின் தாயாரை, அவரிடம் புஸ்ஸி ஆனந்த் பெரும் மரியாதை வைத்துள்ளார். எஸ்.ஏ.சியுடன் முரண் பட்டாலும் தாயார் ஷோபாவிடம் புஸ்ஸி ஆனந்த் முரண்பட்டதில்லை. அவர் மூலம் சில வேலைகளை செய்ய முயன்று நடக்கவில்லை, அவரும் கணவருடன் வெளியேறி தனியாக வசிக்கிறார், இதை புஸ்ஸி பேசியதை வைத்து ஜான் ஆரோக்கியசாமி சொல்வதை அவரது மனைவி என சிலர் சொல்வதும், இன்னும் ஒருபடி மேலே போய் யார் அந்த மேடம் என வாசகர்கள் ஊகத்திற்கு தள்ளுவதும் நடக்கிறது.

விஜய்க்கு இல்லாத கெட்டப்பழக்கமே இல்லை என ஜான் ஆரோக்கியசாமியிடம் புஸ்ஸி சொல்வதுபோல் ஆடியோவை ஒட்டி வெட்டி நம்ப வைக்கிறார்கள், அவர் சொல்வது புஸ்ஸி ஆனந்தின் உதவியாளர் பாண்டி சரவணனே சொல்லிவிட்டார், நான் டீ டோட்லர் என்பார் அப்ப இவரு, இவரு?(புஸ்ஸி ஆனந்த்) அவரது தலைவர் எப்படின்னு கேட்டபோது அவருக்கு எல்லாம் உண்டுன்னு பட்டுன்னு சொல்லிட்டார் என்று சிரிப்பார் ஜான் ஆரோக்கியசாமி. இங்கு சொன்னது பாண்டி சரவணன் சொல்லப்பட்டது புஸ்ஸி குறித்து, ஆனால் அது விஜய் என கேட்பவர்கள் நினைக்கும்படி வீடியோ ஒட்டி வெட்டப்பட்டுள்ளது. இதை வைத்து நுனிப்புல் மேய்பவர்கள் விஜய்க்கு எல்லா கெட்டப்பழக்கமும் உள்ளதாக பதிவிடுகின்றனர். 

இண்டல் என அதில் ஜான் ஆரோக்கியசாமி பேசுவது இண்டலிஜென்ஸ் எனும் உளவுத்துறை குறித்துதான். உளவுத்துறையின் பிடியில் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார் என்பது நெருக்கமான அரசியல் அறிந்தவர்கள் தெரிந்துக்கொண்ட விஷயம். உளவுத்துறை இந்த வேலையை செய்யும். அதற்காக என்ன கேட்டாலும் செய்து தருவார்கள். நட்புடன் பழகி பல விஷயங்களை அறிந்துக்கொள்வார்கள். முடிவில் உளவுத்துறை ஆளுகின்ற கட்சிக்கு சாதகமாக இயங்கும். இதைத்தான் தான் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்ததாக ஜான் ஆரோக்கியசாமி சொல்கிறார். இது நூறு சதவீதம் உண்மைதான். 

பலரையும் கட்சிக்குள் விடாமல் வைத்துக்கொள்வதும், தனக்கு வரும் தகவல்களை உளவுத்துறைக்கு கசிய விடுவதும் புஸ்ஸி ஆனந்த் அவரையறியாமல் செய்து வருகிறார். இதை ஜான் ஆரோக்கியசாமி தெளிவாக எச்சரித்துள்ளார். இது உளவுத்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். புஸ்ஸி ஆனந்த் தங்கள் கட்சி திட்டமிட்ட இயக்கங்கள் குறித்து உளவுத்துறைக்கு தகவல் கசியவிட்டு அதன்மூலம் முந்திக்கொண்டு அவர்கள் செயலாற்றியதாக மூன்று சம்பவங்களை குறிப்பிடுகிறார். இவை உண்மையாக இருக்கலாம். ஆனால் சின்னதாக ஒரு தவெக நிர்வாகி கைதானதற்காக ஒரு மாநாட்டையே ஒரு கட்சி ரத்து செய்யும் என்பது நம்ப முடியாததாக உள்ளது. 

அப்படியானால் அண்ணா யூனிவர்சிட்டி விவகாரம் தவெக அரசியல் செய்ய நல்ல வாய்ப்பை கொடுத்தபோதும் அதை கைநழுவ விட்டது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் தவெகவை தகர்க்க, அதன் உள் விவகாரங்களில் பல ஓட்டைகள் உள்ளது, யாரிடமும் ஒற்றுமை இல்லை என்கிற கருத்தை விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் உருவாக்கி அதன் மூலம் ஒரு நம்பிக்கையின்மையை விதைக்க வேலை நடக்கிறது இதை முறியடிக்க வெண்டுமானால் புஸ்ஸி ஆனந்த் ஒரு நிர்வாகிக்குரிய நபர் அல்ல என்று விஜய் புரிந்துக்கொள்ள வேண்டும். ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ வெளியானதன் பின்னணியில் புஸ்ஸி அனந்த் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவரை விலக்கி வைக்க வேண்டும்.

அடுத்து ஜான் ஆரோக்கியசாமி தனது தகுதிக்கு மீறி கண்டவர்களிடமும் கட்சியின் உள் விவகாரங்களை புலம்பியுள்ளது தெரிகிறது. அவர் வியூக வகுப்பாளர் மட்டுமே. அதை மறந்து அவர் கட்சியின் உள் விவகாரங்களில் ஓவராக மூக்கை நுழைத்ததுமல்லாமல் இதுபோன்ற ஆடியோ வெளியாக காரணமாக அமைந்துள்ளார். இதுவரை அவர் அந்த ஆடியோ விவகாரத்தை மறுக்காத நிலையில் அதை உண்மை என்று நம் ப வேண்டியுள்ளது. அதனால் அவரையும் பொறுப்பிலிருந்து விலக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில்  கட்சியின் நிர்வாகிகள் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பது தவெகவின் மைனஸ் ஆகவே விஜய் நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி முடிவுகள் எடுக்க வேண்டும். தன் கட்சியின் நிலை குறித்தும் ஆடியோ எப்படி இருந்தாலும் அதன் பின்னணியில் உள்ள அரசு இயந்திரங்களின் சக்தி குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். இதை செய்யாவிட்டால் தவெக குறித்து மேலும் மேலும் ஆடியோக்கள் வெளியாகி விஜயகாந்துக்கு எதிரான அரசியல் செய்தது போல் செய்து முற்றிலும் நம்பகத்தன்மை இல்லாத நிலையை உருவாக்கிவிடுவார்கள். 

ஆடியோ விவகாரத்தில் உள்ள உண்மைத்தன்மை அறியாமல் பலரும் பலவிதத்தில் பேசுவதற்கு விஜய் முற்றுப்புள்ள வைக்கவேண்டும், உளவுத்துறையுடன் புஸ்ஸி ஆனந்த் தொடர்பில் இருக்கிறார் என்றால் அதுபற்றி விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தவெக தொண்டர்களின் மனநிலையாக உள்ளது. 
 

இதையும் படிங்க: மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்... பட்டியலுடன் வந்த புஸ்ஸி ஆனந்த்... நிராகரித்த விஜய்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share