×
 

இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு

இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு

இந்தியாவில் நாளுக்கு நாள் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடித்து தூக்கி வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பாஜக ஆளும் முதல்வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.இதற்கு முன்னதாக 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. 

இந்திய நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன இதில் 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே சட்டசபை தேர்தல் நடக்கும் முதலமைச்சர்கள் அங்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் பார்த்தால் மொத்தம் நமது நாட்டில் 31 முதலமைச்சர்கள் பதவியில் இருப்பார்கள்.

இதையும் படிங்க: டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2  காரணங்கள்: "நெட்டிசன்"கள் சொல்வது என்ன? 

பெரும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகளும் கிட்டத்தட்ட வெளியாகி உள்ளன. 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று மாலைக்குள் மொத்தமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது ஒரு மணி நிலவரப்படி பாஜக 46 தொகுதிகளிலும் ஆர்மாத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. 36 இடங்களை பிடித்தாலே பெரும்பான்மை என்ற நிலையில் தற்போது பாஜக 46 தொகுதிகளை பெற்று ஆதி பெரும்பான்மையோடு முன்னிலை வகிக்கிறது.

இதனால் எந்தவித சந்தேகமும் இன்றி டெல்லியில் பாஜக எந்த ஒரு கட்சி துணியும் இன்றி ஆட்சியை பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. ஏற்கனவே ஆந்திரா பீகார் சிக்கிம் பாண்டிச்சேரி நாகாலாந்து மகாராஷ்டிரா மேகாலியா என மொத்தம் ஏழு மாநிலங்களில் பாஜக தனது கூட்டணி கட்சியினரோடு கைகோர்த்து ஆட்சியை நடத்தி வருகிறது. 

உத்திரபிரதேசம் உத்தரகாண்ட் ராஜஸ்தான் ஒடிசா குஜராத் ஹரியானா மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் அசாம் அருணாச்சல பிரதேசம் மணிப்பூர் திரிபுரா என 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியும் அந்த லிஸ்டில் சேர்ந்து கொள்வதால் இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது.

இதையும் படிங்க: 'வாழ்நாளில் பாஜக எங்களை தோற்கடிக்கவே முடியாது...' மோடிக்கு சவால்விட்ட கெஜ்ரிவால்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share