“அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக!
பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையமாக பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்குழுவை இன்று சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். போராட்டக்குழுவினரிடையே கேரவனில் இருந்த படியே உரையாற்றி விஜய், எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து நாடகமாடுவதாகவும், விவசாய நிலமில்லாத வேறு பகுதிக்கு இத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். விஜயின் இந்த பேச்சு குறித்த கேள்விக்கு திமுக மூத்த அமைச்சர் பொன்முடி ஏற்கனவே பதிலளித்துவிட்டார். “திமுக நாடகமாடுவதாக கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவருக்கு அப்படித்தான் பேசத் தெரியும்... வேறென்ன எதிர்பார்க்க முடியும்” பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: பொய்த்துப்போன எதிராளிகளின் அரசியல் கணக்கு... மீண்டும் தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை..!
மாநில அரசு மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்த நிலையில், மத்திய அரசு குறித்து விஜய் பேசிய பேச்சுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிற்கு இன்னும் பல கூடுதல் விமான நிலையங்கள் தேவைப்படுவதாகவும், சென்னை விமான நிலையம் நெரிசல் மிகுந்த இடமாக மாறிவருவதாகவும் சுட்டிக்காட்டினார். பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினரிடையே பேசிய விஜய் நான் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா.? ஓபிஎஸ்ஸின் ரகசியம் என்ன?