அச்சத்தில் பாலிவுட் திரையுலகம்: சயீப் அலிகான் கத்திக்குத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகர்கள் கபில் சர்மா, ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கொலை மிரட்டல் அச்சுறுத்தலை தொடர்ந்து 4 பாலிவுட் பிரபலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளித்துள்ள மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டதை தொடர்ந்து இந்தி திரையுலக நடிகர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன.
பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு பிஷ்ணு என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையும் படிங்க: முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..
அந்தத் தகவலில் ”உங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று நம்புகிறோம். இது விளம்பர நடவடிக்கை அல்ல, இந்த செய்தியை ரகசியமாக வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் இது மிகவும் தீவிரமான மற்றும் ரகசியத்தன்மையுடன் கூடிய செய்தி” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் எட்டு மணி நேரத்திற்குள் பிரபலங்களிடம் இருந்து பதில் வர வேண்டும் என்றும் தவறினால் விபரீத வடிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், நடன இயக்குநர் ரெமோ டி'சோசா, பாடகி சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கும் இதேபோல்மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இது குறித்து போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்
மத்திய அரசின் உதவி நாடுகிறது முன்பே போலீஸ் இதுகுறித்து பி என் எஸ் சட்டப்பிரிவு 351 (3 )பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் வந்த மின்னஞ்சலை ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தானில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசின் உதவியை மும்பை போலீஸார் நாடியுள்ளனர்.
பாலிவுட் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கபில் சர்மா.
" தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் 3" - ல் வெற்றி பெற்றதன் மூலம் கவனத்தை ஈர்த்த கபில், "நைட்ஸ் வித் கபில்" நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவரும் கபில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' தொடங்கி இருக்கிறார்.
ராஜ்பால் யாதவும் பல பாலிவுட் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்ற நிலையில், மேலும் 4 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் அரசியல்வாதி என பாபா சக்தி பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கும் இதே குமரிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது. இதன் எதிரொலியாக அவர் தனது வீட்டில் குண்டு துளைக்காத ஜன்னல்களை அமைப்பது உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பை கணிசமான அளவில் மேம்படுத்தி இருக்கிறார். தொடர் வன்முறை மற்றும் மிரட்டல் காரணமாக பாலிவுட் பட உலகம் அச்சத்தில் மூழ்கி இருக்கிறது.
ஆனால் இந்த மிரட்டல் குறித்து நடிகர்களோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ இதுவரை எந்த அறிக்கையும் விடவில்லை.
இதையும் படிங்க: சைஃப் அலிகானை தாக்கியவர் கைது… ஓடும் ரயிலில் மடக்கிப்பிடித்த போலீஸார்..! காட்டிக் கொடுத்த 'ஃபாஸ்ட் டிராக்'பை..!