×
 

பட்ஜெட் 2025: கவலையில் கல்வித்துறை! குறைந்த நிதி, அதிக ஜிஎஸ்டி, குறைவான முதலீடு எப்போது களையப்படும்?

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது, 2025ம் ஆண்டு அதற்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம். ஏனென்றால், ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் கூட இந்தியாவின் ஜிடிபி 6.5% வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சி எண்கள் நாட்டின் சாதனையை மட்டும் கூறுபவை அல்ல. அவை இளம் தலைமறை, துடிப்பான மக்களின் மீள்தன்மை மற்றும் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன. ஆனால் வளர்ச்சியில் இருக்கும் முக்கிய இடைவெளிகள், கடின கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த வளர்ச்சிக் கதை முழுமை பெறாது.
பெரும்பாலான நாடுகள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சினைகளை கல்வி மூலம்தான் தீர்க்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, கல்வி என்பது சாதாரண விஷயமல்ல, அதுதான் நிலையான வளர்ச்சியின் முதுகெலும்பு, ஏழ்மையிலிருந்து மீட்கும் ஏணியாகவும், புத்தாக்கத்துக்கு எந்திரமாகவும் இருக்கிறது. 
இந்தியாவின் கல்வி முறை என்பது தரம், சமத்துவம் மற்றும்  யாருக்கானது ஆகிய கூறுகளில் ஆழ்ந்த சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கிறது. வளர்ச்சியைத் தக்கவைத்து, அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிசெய்ய, நமது முன்னுரிமைகளில் முதன்மைாயன இடத்தில் வைக்கப்பட வேண்டும். 
2025-26 ஆண்டுக்கான  பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், கல்வியை மையமாக வைப்பது கட்டாயமாகும். ஏனெனில் வலுவான அடித்தளம் இல்லாமல், நமது பொருளாதாரதில் வெற்றி பெறுவதற்கு நாம் அளி்த்துள்ள  வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.


குறைந்த ஒதுக்கீடு
நமது ஜிடிபில் கல்விக்கான ஒதுக்கீடு வெறும் 3 சதவீதம்தான். உலகளவில் இதை ஒப்பீடு செய்யும்போது இது மிகக்குறைவு. ஏனென்றால், உலகளவில் கல்விக்கான ஜிடிபி ஒதுக்கீடு 6 சதவீதம் அளவில் இருக்கிறது. இந்தியாவில் 26 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள், உயர்கல்விக்கான தேவை எழுகிறது, ஆனால் நிதி ஒதுக்கீடு அளவு போதுமானதாக இல்லை.
எதிலிருந்தும் மீள்வதற்கும், புத்தாக்க பொருளாதாரத்துக்கும் கல்விக்கு உலக நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன, போட்டியான இந்த உலகில் தங்களின் மக்களின் திறனையை மேம்படுத்த கல்வியை அளிக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை ஆத்மநிர்பார் பாரத் தொலைநோக்கு கண்ணோட்டத்தில் கல்வி இணைக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் இருமடங்காக பெருக்கப்படுவதால் என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்: தொலைவில் உள்ள குழந்தைகளுக்கு கூட சிறந்த பள்ளிகள், அனுகக்கூடிய வளங்கள், சமமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிகமாக செலவிடுவது மட்டும்போதாது, அதை “ஸ்மார்ட்டாக”வும் செலவிட வேண்டும். ஆக்கப்பூர்வ முடிவுகளைத் தரக்கூடிய நிதி மாதிரிகள் நமக்கு அவசியம். செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நமது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாக பங்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதலால் வரும் பட்ஜெட்டில் கல்விக்கு நிதி ஒதுக்கீடும் அதிகமாக இருக்க வேண்டும், அதை ஸ்மார்ட்டாக எவ்வாறு செலவிட வேண்டும் என்பதிலும் இருக்கிறது.


எளிதாகக் கிடைக்க வேண்டும்
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கல்வி மூலம் நீண்டகாலத்தில் குறைக்க முடியும். ஆனால், ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் கருவிக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தால் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் இந்த அதிகமானவரி விதிப்பு என்பது தரமான கல்வியை ஒரு சாரர் அனுகுவதே சாத்தியமில்லாததாகிவிடும். 
ஸ்விடர்லாந்து நாட்டில் ஜிஎஸ்டியிலிருந்து கல்விக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, சீனாவில் கல்விக்கு மிகக்குறைவாக 6 முதல் 9 சதவீதம்தான். இந்தியாவில் கல்வி என்பது ஆடம்பரப் பொருள் அல்ல என்பதை மத்திய அரசு உணர வேண்டும். 
கல்விச் சேவைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், அல்லது ஏழ்மைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்கள், குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு வரிவிலக்கு அளி்க்க வேண்டும். அப்போதுதான் தரமான கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்ய முடியும்

இதையும் படிங்க: ஜிஎஸ்டி-யால் யாருக்கு ஆதாயம்? ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்பை காலி செய்யும் வரி..

கல்வி சாதனங்கள் பற்றாக்குறை
இந்தியாவில் 65 சதவீத மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன, டிஜிட்டல் கல்வி என்பது மகத்தான நம்பிக்கையை அளிக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், தரமான கல்வி, ஆசிரியர்கள், வளங்களைப் பெறுதல் ஆகியவற்றுக்கு இருக்கும் இடைவெளிக்கு ஆன்லைன் தளங்கள் இணைப்புப்பாலமாக இருக்கின்றன. ஆனால் கிராமப்புறங்களில் இணையதளம் வசதி இல்லாதது, குறைந்தவிலையில் கல்வி தொடர்பான கருவிகள் கிடைக்காதது, டிஜிட்டல் கல்வியறிவின்மை பெரியசவாலாக இருக்கின்றன. ஆதலால் கிராமப்புற மாணவர்களுக்கும், கடைக்கோடியில் உள்ள மாணவர்களுக்கும் தரமான இணையதள வசதி, ஆன்லைன் கல்வி கிடைக்க அறிவிப்புகள் பட்ஜெட்டில் அவசியமாகின்றன.
செயற்கை நுண்ணறிவு கல்வி
செயற்கை நுண்ணறிவு தற்போது உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக இருந்து வருகிறது. இதை இந்திய கல்விமுறைக்குள் எவ்வாறு கொண்டு வருவது, மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிப்பது, ஆசிரியர்களுக்கு கல்விதொடர்பான பயிற்சியை அளிப்பது போன்றவற்றை ஏஐ நுட்பத்தை பயன்படுத்தும் அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தில் மத்திய அரசு செய்யும் முதலீடுகல், கல்வி வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


பிபிபி மாடல்
அரசு,தனியார் துறை இணைந்து கல்வித்துறையில் செயல்படுதல் கல்வியை இன்னும் ஆழமாகக் கொண்டு செல்லும். தேசிய கல்விக்கொள்கை அதற்கான அடித்தளத்தை அமைத்தாலும், மாணவர்கள் திறனை மேம்படுத்தும் திட்டங்கள், பயிற்சிக் கூடங்களை உருவாக்குவது அவசியம். கல்வித்துறையில் முதலீடு செய்யும் தனியாருக்கு வரிச்சலுகைகள் அளிப்பதும், ஆய்வு மையங்கள் அமைக்க  ஊக்கப்படுத்துவதும், இளைஞர்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அமைப்பதும் அவசியமாகும்.
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்தநாடாக மாற்றும் இலக்கை அடைய கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். கல்விக்கான நிதியை பட்ஜெட்டில் அதிகப்படுத்த வேண்டும், வளங்களை ஸ்மார்ட்டாக ஒதுக்குதல், புதுமையான திட்டங்கள், கொள்கை சீர்திருத்தங்கள் மூலம்தான் இலக்கை அடைய முடியும்

இதையும் படிங்க: ஜிஎஸ்டி சர்வர் டவுன்! ரிட்டன் தாக்கல் இன்று கடைசி நாளில் வரி செலுத்துவோர் அவஸ்தை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share